தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த சிவசங்கர் பாபா, நெஞ்சுவலி எனக்கூறி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் சிகிச்சை மருத்துவமனையில் தலைமறைவாக இருந்து வந்தார். விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு  சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக டேராடூன் சென்றபோது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். தப்பியோடிய அவர் வேறு ஆசிரமங்களில் பதுங்கி உள்ளாரா என சிபிசிஐடி தேடுதல் வேட்டை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று காலை சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி காவல்துறையினர் காசியாபாத் பகுதியில் கைது செய்தனர். கைது செய்த பாபாவை இன்று இரவிற்குள் டெல்லியில் இருந்து சென்னை அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். இந்தச் சூழலில் சிவசங்கர் பாபவின் கைது தொடர்பாக பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது ட்விட்டர் கணக்கில் பதிவுகளை இட்டு வருகின்றனர். 






அதன்படி நடிகை காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், "#HangShivashankar  நான் காலையில் இருந்து பாபா தொடர்பான வீடியோவை பதிவிட முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அதை பதிவேற்ற முடியவில்லை. ட்விட்டர் தளம் அவமானப்படவேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார். இதேபோன்று பலரும் தங்களுடைய ட்விட்டர் பதிவில் இந்த பாபாவிற்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். 


அவற்றில் சில, 


 






 






 






 






இவ்வாறு பலரும் பாபாவிற்கு சிபிசிஐடி  காவல்துறையினர் விரைவாக விசாரணை நடத்தி உரிய தண்டனையை பெற்று தர வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே சென்னை கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த பாபாவின் தனியார் பள்ளியை மூட குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: தலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..!