பாம் ரவி கொலை வழக்கில் கைதான 2 பேரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி வாணரப்பேட்டை தாவீது பேட்டையை சேர்ந்தவர் ரவி என்ற பாம் ரவி (வயது 33). பிரபல ரவுடியான இவர், தனது நண்பரான அந்தோணி (28) என்பவருடன் கடந்த 24-ந் தேதி மதியம் மோட்டார் சைக்கிளில் வாணரப்பேட்டை பகுதியில் சென்ற போது மர்ம கும்பலால் வெடி குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
இந்த இரட்டை கொலை தொடர்பாக முதலியார் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன் (21), பிரகாஷ், ராஜேஷ், சந்துரு, நவீன், ரமணி, மோகன், மாணிக்கம், சூர்யா ஆகிய 9 பேரை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் தள்ளினர். இந்த கொலை தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்த வாணரப்பேட்டை அருண் குமார் (24), ரெட்டிச்சாவடி பிரவீன் குமார் (22) ஆகிய 2 பேர் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து அருண்குமார், பிரவீன்குமார் ஆகிய 2 பேரையும் , காவலில் எடுத்து விசாரிக்க புதுச்சேரி நீதிமன்றத்தில் முதலியார்பேட்டை போலீசார் மனு அளித்தனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடந்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. கடந்த 9-ந்தேதி தேதி அருண் குமார், பிரவீன் குமார் ஆகியோரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் பாம் ரவி, அந்தோணி ஆகியோர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. கைதான 2 பேரும் சேர்ந்து தான் இரண்டு நாட்டு வெடி குண்டுகளை தயாரித்துள்ளனர். அதில் ஒன்றை பாம் ரவி, அந்தோணி மீது வீசியுள்ளனர். மற்றொரு வெடிகுண்டை நெட்டப்பாக்கம் பகுதியில் மறைத்து வைத்தனர். அதை போலீசார் நேற்று கைப்பற்றி, பாதுகாப்பாக வைத்துள்ளனர். அருண்குமார், பிரவீன்குமார் இருவரிடமும் இருந்து 2 கத்தி, மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 நாள் விசாரணைக்கு பிறகு 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்று மாலை மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்