மயிலாடுதுறையில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.

உறவினர் வீட்டில் சிறுமியுடன் தங்கியிருந்த  பாலமுருகனை கைது செய்த போலீசார்,  சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து பாலமுருகனிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வயப்படுத்தி திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

Continues below advertisement

மயிலாடுதுறை அருகே சிறுமியை  திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் கீழத் தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகன்  பாலமுருகன் (22) . இவர்  டிரைவராக பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறை நர்சிங் கல்லூரியில் பயின்று வரும் 17 வயது சிறுமியை கடந்த சில மாதங்களாக காதலிப்பதாக கூறி பின் தொடர்ந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 8  ஆம் தேதி மயிலாடுதுறைக்கு வந்த சிறுமி வீடு வெகு நேரம் கடந்தும் திரும்பவில்லை. இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும்  சிறுமி கிடைக்காததால், அவரது பெற்றோர் சந்தேகத்தின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை பாலமுருகன் கடத்திச் சென்றதாக  புகார் அளித்தனர். புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


விசாரணையில் உறவினர் வீட்டில் சிறுமியுடன் தங்கியிருந்த  பாலமுருகனை கைது செய்த போலீசார்,  சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து பாலமுருகனிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வயப்படுத்தி திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலமுருகன் மீது போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola