கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே பிளஸ் டூ மாணவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் டி கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரை என்பவரின் மகன் கோகுல்ராஜ் (வயது 17) அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்த நிலையில் திருக்கோவிலூர் டி கீரனூர் புறவழிச்சாலையில் பிளஸ் டூ மாணவன் கோகுல்ராஜ் என்பவரை கத்தியால் கழுத்தில் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கேயே கத்தியை போட்டுவிட்டு கொலையாளிகள் தப்பி ஓடியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மாணவன் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் முதற்கட்ட விசாரணையில், நேற்று மாலை வீட்டை விட்டு சென்றார் பிளஸ் 2 மாணவன் கோகுல்ராஜ் எனத் தெரியவந்தது. நீண்ட நேரம் வீடு திரும்பாததால் அவர்கள் பெற்றோர்கள் அவரை இரவு முழுவதும் தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கீரனூர் புறவழி சாலையில் இருந்த நிலையில் பிளஸ் டூ மாணவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பின்னர் போலீசார் விசாரணையில் பிறந்தநாள் விழா கொண்டாட சென்றதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், இதில் ஏதாவது தகராறு ஏற்பட்டு இவர் கொலை செய்யப்பட்டாரா ? இல்லை காதல் விவகாரத்தில் பிளஸ் டூ மாணவன் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டு மது போதையில் இருக்கும்பொழுது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிளஸ் டூ படிக்கும் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு 2022: ராணுவத்தில் சேர வேண்டுமா..? 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!
Also Read:பழனி கோவிலில் அறநிலையத்துறை பணிகள்..விண்ணப்பிப்பவர்கள் கவனத்துக்கு..
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்