குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சார்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளராக மதீஷா பதிரனா களமிறங்கி தான் வீசிய முதல் பந்தில் முதல் விக்கெட் எடுத்துள்ளார். 


குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் ஐபிஎல் 62 வது போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.


அதன் அடிப்படையில், சென்னை அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 5 ரன்களில் வெளியேற, ருதுராஜ் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 


தொடர்ந்து, சென்னை அணியின் விக்கெட்கள் மளமளவென விழுக, மறுபுறம் தாக்குபிடித்த ருதுராஜ் அரைசதம் அடித்து 53 ரன்களில் ரசித் கான் வீசிய 16 வது ஓவரில் அவுட் ஆனார். அதனைதொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே ரன் எண்ணிகையை தொடராமல் வெளியேறினார். 


பின்வரிசையில் களம் கண்ட தோனியும் 7 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளிக்க, தமிழக வீரர் ஜெகதீசன் கடைசி வரை அவுட் ஆகாமல் 39 ரன்கள் எடுத்து இருந்தார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. 


134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. குஜராத் அணியின் தொடக்க வீரராக சஹா சென்னை அணியின் பந்து வீச்சை நொறுக்கினார். கில் நிதானம் காட்ட குஜராத் அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் குவித்தது. 






இந்தநிலையில், சென்னை அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளராக மதீஷா பதிரனா களமிறங்கி 8 வது ஓவர் வீசினார். இவர் வீசிய 8 வது முதல் பந்தே சுப்மன் கில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். அதேபோல், மதீஷா பதிரனா 14 வது ஓவர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை 7 ரன்களில் வெளியேறினார். 


யார் இந்த மதீஷா பதிரனா..? (குட்டி மலிங்கா)


ஐபிஎல் தொடரில் ஆடம் மில்னேவுக்கு மாற்றாக, இலங்கையைச் சேர்ந்த இளம் பௌலரான மதீஷா பதிரானாவைக் களமிறக்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 


இலங்கை நாட்டைச் சேர்ந்த இளம் பௌலரான மதீஷா பதிரானா இலங்கை அணி சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டிகளில் இரண்டு முறை பங்கேற்றுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டின்  19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் 4 போட்டிகளில் 6 விக்கெட் எடுத்துள்ளார் மதீஷா பதிரானா. எனினும் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற  19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளில் அனைவரையும் தன்னுடைய அதிவேக பௌலிங் மூலம் திரும்பிப் பார்க்க செய்துள்ளார் மதீஷா பதிரானா.  


இலங்கை வீரரான லசித் மலிங்காவின் ஸ்டைலைப் பின்பற்றி பந்து வீசுபவர் மதீஷா பதிரானா. மேலும், யார்க்கர் பந்து வீச்சில் சிறந்தவரான மதீஷா மீது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீண்ட காலமாக கண் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு, ஐபிஎல் தொடரின் போது மதீஷா பதிரா சென்னை அணியின் ரிசர்வ் வீரராக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண