விழுப்புரம்: அன்புஜோதி அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கினைப்பாளர் காஞ்சன் கட்டார்  விசாரனை செய்து  இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் அருகேயுள்ள குண்டலப்புலியூர் அன்புஜோதி அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கபட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய சம்பவத்தில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு நிர்வாகி ஜீபின் பேபி மற்றும் அவரது மனைவி மரியா நிர்வாக பணியாளர்கள் சதீஷ், கோபிநாத் பிஜீமேனன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கினை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடி விசாரனைக்கு மாற்றி உத்தரவிட்டார். அறக்கட்டளையிலிருந்து 16 பெண்கள் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெண்களை தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் மற்றும் மகளிர் ஆனைய வழக்கறிஞர் மீனாகுமரி நேரில் பார்வையிட்டு ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரனை செய்து வீடியோவாக பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்று கொண்டனர். வாக்கு மூலம் பெறும் பேது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி எஸ் பி ஸ்ரீநாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகளை வெளியே அனுப்பி விட்டு விசாரனையை மேற்கொண்டனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக இரண்டு பெண்கள் நீதியிடம் கூறியுள்ளனர். அதனை இன்று விசாரனை செய்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தாங்களும் உறுதி படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரனை அறிக்கையை தயார் செய்து மகளிர் ஆணையத்தில் சமர்பிக்க உள்ளதாக காஞ்சன் கட்டார் தெரிவித்துள்ளார்.