Madurai : வீட்டு வாசலில் மது குடித்த சிறுவர்கள்: தட்டிக்கேட்ட காவலாளி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

வீட்டு வாசலில் மது குடித்த சிறுவர்களை தட்டிக் கேட்ட காவலாளி மீது பெட்ரோல் குண்டுவீச்சு- தேவகோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வலனை முத்துபட்டினத்தைச் சேர்ந்தவர் வட்டபன் வயது  (58). இவர் பகலில் உணவகத்திலும் இரவில் கருதஊரணி பகுதியில் உள்ள மணி ஏஜென்சி தொழிலதிபர் வீட்டிலும் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் தொழிலதிபர் வீட்டின் வாசலில் கூட்டமாக மது அருந்தியுள்ளனர்.

Continues below advertisement

 
இதுகுறித்து வட்டப்பன் தட்டிகேட்ட போது போதையில் இருந்த மர்ம நபர்கள் ஆத்திரமடைந்து  தொழிலதிபர் வீட்டின் மீது  பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இதில் காவலாளி வட்டப்பன் படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு வந்த  அக்கம் பக்கத்தினர் காவலாளியை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
 

மேலும் இதே மர்ம நபர்கள் போதையில்  அப்பகுதியில் உள்ள மூன்று கடைகளை உடைத்து குளிர்பானங்களை திருடியும் மேலும் ஹோட்டலை சேதப்படுத்தி அதில் இருந்த இருக்கைகளை  சாலையில் வைத்து  வழியை மறித்துள்ளனர்.  இதுகுறித்து தேவகோட்டை நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அருகில் இருக்கும் சி.சி.டிவி காட்சிகளை ஆராய்ந்து  மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இது தொடர்பான சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சிறுவர்களிம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola