திருமணத்தை மீறிய பந்தம் எப்போதும் பிரச்னைகளில் முடிந்துவிடுகிறது. ஒரு சில நேரங்களில் அந்த உறவு கொலை குற்றம் வரை சென்றுவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது. தன்னுடைய தாயுடன் உறவு வைத்திருந்த நபரை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போவை பகுதியில் ராஜேஷ் வைத்யா(47) என்ற நபர் வசித்து வருகிறார். இவர் ஒரு வீட்டில் வேலை பணியாளர்களை நிர்வாகிக்கும் வேலையை செய்து வருகிறார். அங்கு அவருடன் வேலை பார்க்கும் பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நாளடைவில் அவர்களின் பழக்கம் தனிமையில் உடலுறவு வைத்து கொள்ளும் அளவிற்கு மாறியுள்ளது.
இந்தச் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை ராஜேஷ் வைத்யா மற்றும் அப்பெண் ஆகிய இருவரும் அப்பெண்ணின் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அப்பெண்ணின் மகன் மணீஷ் நாயக் இதை பார்த்து ஆத்திரம் அடைந்துள்ளார். ராஜேஷ் வைத்யாவுடன் அவர் சண்டை போட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த மணீஷ் நாயக் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரமாறியாக குத்தியுள்ளதாக தெரிகிறது. அங்கு இருந்து தப்பி வந்த ராஜேஷ் வைத்யா இரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்துள்ளார்.
அவரை அடையாளம் கண்ட சிலர் அவருடைய சகோதருக்கு தொலைப்பேசியில் தகவல் அளித்துள்ளனர். ராஜேஷ் வைத்யாவின் சகோதரர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து ராஜேஷ் வைத்யாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ராஜேஷ் வைத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் மணீஷ் நாயகை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தாயிடம் உறவு வைத்திருந்த நபரை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ரயிலில் பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சி டி.எஸ்.பி... தக்கநேரத்தில் காத்த காவலன் செயலி! என்ன நடந்தது?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்