சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவு 3 மணியளவில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டன. அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து அந்த வீடியோ காட்சியை வைத்து நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு பாஜக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வினோத் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். போலீசார் கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளை இன்னும் போலீசார் வெளியிடவில்லை. வினோத் மீது ஏற்கெனவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டு டாஸ்மாக் கடையிலும் , தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் இதேபோன்று பெட்ரோல் குண்டு வீசி குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த குண்டுவீச்சில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. குண்டுவீச்சு சம்பவத்தை கேட்டு அறிந்த பாஜகவினர் ஏராளாமானோர் அங்கு குவிந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக அலுவலகத்தில் எப்போதுமே, பாதுகாப்புக்கு போலீசார் இருக்கும் நிலையில், இந்த சம்பவத்தால் மேலும் ஏராளாமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக,குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் கூறுகையில், “நள்ளிரவு 1:30 மணியளவில் எங்கள் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் நடந்தது. அதில் திமுகவின் பங்கு இருந்தது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசசுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளோம்... பாஜகவினர் இதுபோன்ற விஷயங்களுக்கு பயப்பட வேண்டாம்” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்