இந்திய நாட்டின் தேசியப் பறவையான மயிலின் இறைச்சியை சமைத்து, யூடியூப்பில் வீடியோவை வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
மயில் இறைச்சி வீடியோ:
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம் தங்கல்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோடம் பிரனய் குமார். இவர் , யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் அவ்வப்போது, வியூஸ்காக வீடியோக்களை போடுவது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் போட்ட வீடியோவானது பெரும் வைரலான நிலையில், தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் , தேசிய பறவையான மயில் கறியை எப்படி சமைப்பது என காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், இறைச்சியை அவர் சாப்பிடுவதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். இந்த வீடியோவானது, யூடியூபில் பெரும் வைரலானது, இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
Also Read: திண்டிவனத்தில் பதற்றம்... 18 வயது மாணவனை கத்தியால் கழுத்தை கிழித்த திமுக நிர்வாகி...
கைது:
இந்த தருணத்தில், இந்த வீடியோவானது காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, உடனடியாக நபரை கண்டறிந்து, காவல்துறையினர் கைது செய்தனர். பிரனய் குமார் என்ற அடையாளம் கண்டறியப்பட்ட நபர் மீது, தற்போது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், சமைக்கப்பட்ட மயில் இறைச்சி, யூடியூபரின் ரத்த மாதிரிகளை வனத்துறை அதிகாரிகள் சேகரித்து சென்றனர்.
மயில் கறி சாப்பிட்டது உறுதி செய்யப்படால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடைசியில் ட்விஸ்ட்:
இந்நிலையில், கடைசி நேரத்தில் ட்விஸ்ட் நடந்துள்ளது. அது என்னவென்றால், இறைச்சியை சோதனை மேற்கொண்டதில், அது கோழி இறைச்சி என தெரியவந்துள்ளது. விசாரணையில், அவர் வீட்டருகே உள்ள கோழி இறைச்சி கடையில் வாங்கி சமைத்ததாக தெரிவித்துள்ளார்.
இவர், யூடியூபில் வியூஸ்க்காக மயில் கறி என பொய்யான தகவலை கூறி சமைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளில் மயில் இருக்கிறது. விளைநிலங்கள், சில தருணங்களில் மக்கள் குடியிருப்புகள் அருகேயும் மயில் வருவதும் வழக்கம்.
மயில், நம் நாட்டின் தேசிய பறவையாக இருப்பதால், யாரும் அதை வேட்டையாடுவதில்லை. மேலும் , தேசிய பறவையாக இருப்பதால், வேட்டையாடுவது குற்றமாகும்.
Also Read: சென்னையை கலக்கிய பிரபல ரவுடி... என்கவுண்டரில் சுட்டுப்பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்.. நடந்த என்ன ?