நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள சங்கனாபுரம் கிராமம் காட்டு நாயக்கர் இனத்தை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித். இவரது மனைவி ராஜேஸ்வரி. இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் சிவசக்திபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது ஒன்றரை வயது குழந்தையான  மாதேஸ்வரன் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர் யாரோ ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.




அதன் பின்னர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து குழந்தையை பார்த்தபோது குழந்தை காணாமல் போனதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் காணாமல் போன குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் ராஜேஸ்வரி இதுகுறித்து பழவூர் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் செய்துள்ளார். இந்த நிலையில் குழந்தை காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக காணாமல் போனதாக கூறப்படும் குழந்தையை உண்மையிலேயே யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது குழந்தை விற்கப்பட்டதா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அக்கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா எங்கு உள்ளது என கண்காணித்து அதன் மூலமும் காவல்துறையினர் காணாமல் போன குழந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போன சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண