கேரள மாநிலம் பாலக்காடு சேர்ந்தவர் R.லட்சுமி (23). இவா் கேரளா மாநிலம் பாலக்காட்டை சோ்ந்தவா். இவா் மென்பொறியாளா். லட்சுமி சென்னை சோளிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஹெச் சி எல் என்ற தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில், ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சித்தூரை சோ்ந்த S.லாவண்யா (23) என்ற பெண் மென்பொறியாளரும் பணியாற்றினாா். ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் இருவரும், நவல்லூர் அருகே OMR சாலையில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
நேற்று வழக்கம் வழக்கம்போல் பணிக்கு சென்று இரவு 11 மணிக்கு அலுவலக பணி முடித்துவிட்டு நாவலூர் அருகில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து நடந்து தனியார் குடியிருப்புக்கு இருவரும், சாலை ஓரம் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தனா். அவா்கள் தங்கியிருக்கும் இடத்தை நெருங்கியபோது,வேகமாக வந்த சொகுசு காா் ஒன்று, இவர்கள் மீது மோதியது. மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். அதே நேரத்தில் பின்னால் வாகனங்களில் வந்தவர்கள், மோதிய காரை மடக்கி பிடித்தனர். அதோடு 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதை அடுத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் அடங்கிய, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்தனர். அதோடு ஆம்புலன்ஸ்சும் வந்தது. அவா்கள் பரிசோதித்தபோது கேரளாவை சோ்ந்த மென்பொறியாளா் லட்சுமி, அதே இடத்தில் உயிரிழந்து கிடந்தாா். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு மென்பொறியாளா் லாவண்யாவை ஆம்புலன்ஸ்சில் ஏற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், இன்று காலை லாவண்யா உயிர் இழந்தார்.
இதை அடுத்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து, இரண்டு உயிர்களை பலி வாங்கிய சொகுசு காரை ஓட்டி வந்த, மோதீஸ் குமார் (20) என்பவரை கைது செய்தனா். இவா் சென்னை சோளிங்கநல்லூரை சோ்ந்தவா் என்பதும் போதையில் காரை தாறுமாறாக இயக்கியதும் தெரியவந்தது. மேலும் இது குறித்து தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். OMR சாலையில் நள்ளிரவில் சொகுசு காா் ஏற்படுத்திய விபத்தில் கேரளா, ஆந்திரா மாநிலங்களை சோ்ந்த 2 பெண் மென்பொறியாளா்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்