மதுரையில் குட்கா விற்பனை செய்யப்பட்ட 19 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் - 19 கடைகளுக்கான பதிவுச்சான்றுகளை ரத்து செய்து உணவுப்பாதுகாப்புத்துறை நடவடிக்கை.

 

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுப்பதற்கான  நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவட்ட முழுவதிலும் காவல்துறையினர் பல்வேறு கடைகளிலும் சோதனைகள் நடத்தி குட்கா விற்பனை செய்த கடைகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னரும் தொடர்ச்சியாக காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறியும் குட்கா விற்பனை செய்யப்பட்ட 19 கடைகள் மீதும் மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாநகர் பகுதிகளில் இரண்டு முறைக்கு  குட்கா விற்பனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 19 கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகளில்  இன்று உணவுப்பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டனர்.

 




அதன்படி மதுரை மாநகர் வில்லாபுரம்  , விளக்குத்தூண், எஸ் எஸ் காலனி, மதிச்சியம் அண்ணா பேருந்துநிலையம் உள்ளிட்ட  பகுதிகளில் உள்ள 19 கடைகளுக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளுக்கு சென்று நோட்டீஸ் அளிக்கப்பட்டு பின்னர் கடைகளுக்கு சீல் வைத்தனர். அண்ணாநகர் பேருந்து நிலைய பகுதயில்  உள்ள மாற்றுத்திறனாளி ஒருவரின் கடைக்கு சீல் வைக்கப்படுவதற்கு முன்பாக கடை உரிமையாளரிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மனிதாபமான அடிப்படையில் கடைகளில் உள்ள பொருட்களை எடுப்பதற்கு சிறிது நேரம் கால அவகாசம் கொடுக்கப்பட்ட பின்பாக கடைகளுக்கு சீல் வைத்தனர்.



 

மதுரை மாநகர் பகுதியில் ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் உத்தரவுப்படி  குட்கா விற்பனை செய்த19 கடைகளுக்கு உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தோடு கடைகளுக்கான உணவுப்பாதுகாப்புத்துறை சான்று மற்றும் பதிவுச்சான்றுகளையும் ரத்து செய்து நடவடிக்கை எடுத்தனர். மதுரை மாவட்டத்தில் எச்சரிக்கையை மீறியும் தடைசெய்யப்பட்ட குட்கா , பான்மசாலா விற்பனையில் ஈடுபடும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவுப்பாதுகாப்புத்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



 



இது தொடர்பாக அதிகாரிகள் நம்மிடம் கூறுகையில், எக்காரணம் கொண்டும் அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட பொருட்களை ஒரு குறிப்பிட்ட சில வியாபாரிகள் தான்,  சிறு கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. அவர்களையும் குறி வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.



 


 



 



Calculate Your Body Mass Index ( BMI )


Calculate The Age Through Age Calculator