திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, தாமரைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆலடியான் மகன் ஏழுமலை (55). இவர் தந்தை-மகன் இருவரும் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் பஞ்சமி நிலத்தை, அதே கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், ஏழுமலை பலமாதங்கலாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்துள்ளனர். இது தொடர்பாக, ராமமூர்த்தியின் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். அவரை தகராறு செய்து மிரட்டியுள்ளனர். அதனால், நிலத்தை மீட்டு தரக்கோரி அதிகாரிகளிடம் ஏழுமலை முறையிட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ராமமூர்த்தியின் மகன் கோட்டீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள். ஏழுமலையை கொலை செய்வதாக அச்சுறுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதியன்று அதே கிராமத்தில் ஏரிக்கரை பகுதிக்கு அருகேயுள்ள முட்புதரில் ஏழுமலை படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக, கடலாடி காவல்நிலையத்தில் ஏழுமலையின் தந்தை ஆலடியான் கொடுத்த புகாரின் பேரில், கொலை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ராமமூர்த்தியின் மகன் கோட்டீஸ்வரன் (27), அவரது தாய் மணிமேகலை (50), தாத்தா கிருஷ்ணமூர்த்தி (60) ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் நாங்கள் தான் கொலை செய்தோம் எனறும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒரு ஆண்டாகளாக நடைப்பெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கோவிந்தராஜன், தீர்ப்பை அறிவித்தார்.
அதன்படி, ஏழுமலையை கொலை செய்த கோட்டீஸ்வரன் (27), அவரது தாத்தா கிருஷ்ணமூர்த்தி (60) ஆகியோருக்கு கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு, 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணிமேகலை விடுவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து, கோட்டீஸ்வரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இரண்டு நபர்களையும் கைது செய்த காவல்துறையினர் அழைத்து சென்று வேலூர் மத்தய சிறையில் அடைத்தன்.
DMK Rajiv Gandhi Interview | சீமான் ஒரு பொய்யர்..சாட்டை துரைமுருகன் ஒரு ஆபாச பேச்சாளர்| Seeman | NTK