நொய்டாவில் காதலி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் காதலன் செய்த கொடூர செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் படாவுன் பகுதியை சேர்ந்த விகாஸ் என்ற இளைஞர் மாமுராவில் வசிக்கும் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஜூலை 14 ஆம் தேதி மாமுரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகே அப்பெண்ணின் மீது விகாஸ் திடீரென ஆசிட் தாக்குதல் நடத்தினார். இதில் நிலைகுலைந்து போன அப்பெண் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். 




இந்த சம்பவம் குறித்து நொய்டாவின் 3 ஆம் கட்ட காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையில் நேற்றைய தினம் நொய்டாவின் 3 ஆம் கட்ட காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த நபர் ஒருவர் அவர்களை பார்த்ததும் தப்பிக்க முயன்றார். அதுமட்டுமில்லாமல் போலீசார் மீதும் அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால்  காவல்துறையினருக்கும் அந்த நபருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் அந்த நபர் காலில் குண்டு பாய்ந்தது. 


இதனையடுத்து அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் மாமுரா பகுதியில் நடந்த ஆசிட் தாக்குதலில் தொடர்புடைய விகாஸ்  என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில் ஆசிட் தாக்குதலுக்கான பெண்ணும், விகாஸூம் காதலித்து நீதிமன்றத்தை அணுகி திருமணம் செய்துக் கொண்டதாகவும், மும்பையில் 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்ததாக மத்திய நொய்டாவின் காவல் துணை ஆணையர் ஹரிஷ் சந்தர் தெரிவித்துள்ளார். மேலும் அப்பெண் தற்போது வேறொரு நபருடன் தொடர்பு வைத்துள்ளதாக ஏற்பட்ட சந்தேகத்தால் ஆசிட் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார். 


காயமடைந்த விகாஸை மருத்துமனையில் போலீசார் அனுமதித்த நிலையில், அப்பெண்ணும் விகாஸூம் உண்மையிலேயே கணவன், மனைவியா..இல்லை காதலியா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த தாக்கிதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண