வீட்டுக்குள் நடந்த வாக்குவாதம் முற்றியதில் 14வயதான சிறுமி அவருடைய தாயை வறுவல் சட்டியால் அடித்துக்கொலை செய்த சம்பவம் நொய்டாவில் அரங்கேறியுள்ளது.
9ம் வகுப்பு படிக்கும் 14வயதான சிறுமி தன்னுடைய தாயுடன் நொய்டாவில் வசித்து வந்துள்ளார். அச்சிறுமி மன அளவில் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. தந்தையும் தாயும் பிரிந்த நிலையில் அவருடன் பிறந்த சகோதரன் டெல்லியில் உள்ள தன்னுடைய மாமா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிக்குள் அடிக்கடி தாயுக்கும் மகளுக்கும் வாக்குவாதமும் சண்டையும் நடக்கும் என தெரிகிறது.
சினிமாவை மிஞ்சும் க்ரைம் சீன்! மகனை ஆதாரங்களுடன் போலீஸில் பிடித்துக் கொடுத்த தந்தை
மன அளவில் பாதிக்கப்பட்ட அச்சிறுமி ஏதாவது ஒரு காரணத்தால் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம்போல் தாயுக்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் கோபமடைந்த அச்சிறுமி வீட்டில் இருந்த வறுவல் சட்டியால் தாயின் மண்டையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த கொடூரதாக்குதலில் நிலைகுலைந்து விழுந்துள்ளார் அப்பெண்ணின் தாய்.
பிழைக்க வழி தெரியாததால் சாலையில் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடி சாவாரி ஓட்டிய நபர் கைது
ரத்த வெள்ளத்தில் பெண் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். புகாரை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு கைலாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அப்பெண் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் தலையில் பலமாக தாக்கப்பட்டு 22 வெட்டுக்காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் போலீசார் தொடர் விசாரணையால் அம்மாவை தானே அடித்துக் கொன்றதாக மகள் ஒப்புக் கொண்டுள்ளார். வீட்டு வேலைகளை செய்யக் கூறி தொடர்ந்து வற்புறுத்தியால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்தக் கோபத்தில் வீட்டில் இருந்த வறுவல் சட்டியால் பலமுறை தலையில் தாக்கியதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து சிறுமியை கைது செய்த போலீசார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மனதளவில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு சிகிச்சையும் அளிக்கப்படும் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்