தேர்தலில் கணக்குகள் மிக முக்கியம்... அந்த வகையில், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்ட பாஜகவும், அதிமுகவும் அக்கட்சிகள் பலமாக உள்ள கோவையில் படுதோல்வியை சந்தித்துள்ளன. கோவை மாநகராட்சியின் பல வார்டுகளில் அதிமுக-பாஜக ஓட்டுகளை சேர்த்தால், அங்கு வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட அதிகம் வருகிறது. அப்படி, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் புள்ளி விபரத்தை எடுத்து பார்க்கும் போது , தனித்து போட்டியிட்டதால் அதிமுக 15 வார்டுகளை இழந்திருக்கிறது. இதோ அந்த வார்டுகளின் விபரமும், அங்கு வெற்றி பெற்ற வேட்பாளர் மற்றும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரத்தை பட்டியலிடுகிறோம். 



பாஜக கூட்டணி இல்லாமல் கோவையில் அதிமுக இழந்த வார்டுகள் எத்தனை தெரியுமா? இதோ அதிகாரப்பூர்வ புள்ளி விபரம்!


கோவை மாநகராட்சி:


வார்டு எண் -6 


வெற்றி: திமுக-3549


அதிமுக-2887


பாஜக-1337


வார்டு எண்-12


வெற்றி : மார்க்சிஸ்ட்-1915


அதிமுக-1568


பாஜக-1040


வார்டு எண்-13


வெற்றி: மார்க்சிஸ்ட் -2506


அதிமுக-2055


பாஜக-454


வார்டு எண் -14


வெற்றி: மதிமுக-1678


அதிமுக-724


பாஜக-737


வார்டு எண்-15


வெற்றி: காங்கிரஸ் -3452


அதிமுக-2629


பாஜக-1061


வார்டு எண் -24


வெற்றி-மார்க்சிஸ்ட் -3054


அதிமுக-2480


பாஜக-716


வார்டு எண் -28


வெற்றி: மார்க்சிஸ்ட் -4514


அதிமுக-2913


பாஜக-2372


வார்டு எண் -53


வெற்றி: இந்திய கம்யூனிஸ்ட் -3453


அதிமுக-3206


பாஜக - 1774


வார்டு எண் -69


வெற்றி: காங்கிரஸ் -3669


அதிமுக-2039


பாஜக-1990


வார்டு எண்-71


வெற்றி: காங்கிரஸ்-1465


அதிமுக-1309


பாஜக-1275


வார்டு எண் -72


வெற்றி: திமுக-4458


அதிமுக-3725


பாஜக-674


வார்டு எண்-73


வெற்றி: திமுக-4836


அதிமுக-3744


பாஜக-1399


வார்டு எண்-88


வெற்றி: திமுக- 3756


அதிமுக-3395


பாஜக-563


வார்டு எண் -89


வெற்றி: காங்கிரஸ் -4076


அதிமுக-3408


பாஜக-1048


வார்டு எண்- 91


வெற்றி: திமுக- 4306


அதிமுக-3823


பாஜக-562


 


இந்த 15 வார்டுகளில் அதிமுக-பாஜக கூட்டணி இருந்திருந்தால், அந்த கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்பிருந்திருக்கும் என்பதை அவர்கள் பெற்றுள்ள வாக்குகள் மூலம் அறிய முடிகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண