மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மடவாமேடு மீனவ கிராமத்தை  சேர்ந்தவர் வீரத்தமிழன் என்பவரின் மகன் விக்னேஷ். 26 வயதான இவருக்கும் இவரது உறவினரான பழையார் பகுதியை சேர்ந்த 23 வயதான துர்கா என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மடவாமேடு கிராமத்தில் பாட்டி மாரியம்மாள், மற்றும் மனைவியுடன் விக்னேஷ் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக விக்னேஷ் தொடங்கியுள்ளார். தகவல் அறிந்த   அவரது தந்தை வீரத்தமிழன் விக்னேஷ் இறப்பில் மர்மம் இருப்பதாக புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.




புகாரை பெற்றுக்கொண்ட புதுபட்டினம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் சந்திரா மற்றும் சக காவலர்கள் விரைந்து சென்று விக்னேஷின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டதால் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.




கொரோனா வைரஸ் தொற்று பரவ காரணமாக பல்வேறு தரப்பு மக்களும் வேலைவாய்ப்பை இழந்து பொருளாதார ரீதியாக, மனதளவிலும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டு பல குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அதிகளவு சண்டை ஏற்பட்டு விரிசல்கள் ஏற்படுகிறது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும் பல குடும்பங்கள் பிரித்து விடுகின்றனர். மேலும் சிலர் தவறான முடிவை கையில் எடுத்து தற்கொலை முடிவை கையில் எடுக்கின்றனர்.  




இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 - 24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தீர்வு காண வேண்டுமெனவும், இல்லையெனில் இதுபோன்ற விபரீத நிகழ்வுகள் நடைப்பெற்றது, பலரது வாழ்க்கை பாழ்கிறது என பல சமூக ஆர்வலர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசு இது போன்று காலத்தில் மன அழுத்தம் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க இந்த பிரச்சனைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மனநல மருத்துவர்களை நியமனம் செய்யவேண்டும் என்றும் பலரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.