ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பது அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆன்லைன் தளம் மூலம் அறிமுகமான நபர் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ரகசியமாக படம் எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


அமெரிக்காவின் நியூஹெம்ஷேர் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்கு உள்ள பிரபல ஒன்லி ஃபென்ஸ் என்ற டேட்டிங் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். இவர் ஒரு மாடல் அழகியாக இருந்து வருகிறார். இதனால் இவரிடம் பலரும் பேசி வந்துள்ளனர். அப்படி பேசி வந்த நபர்களில் ஒருவர் டெமியன் குரேரோ(24). இவருக்கும் அப்பெண்ணிற்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 




இருவரும் நிறையே தகவல்களை பரிமாறி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அப்பெண்ணின் வீட்டு முகவரியையும் குரேரோ தெரிந்து கொண்டுள்ளார். ஆன்லைனில் பழகி வந்த அப்பெண்ணை தினமும் பின் தொடர்ந்து வீடு வரை சென்றுள்ளதாக தெரிகிறது. இந்தச் சூழலில் திடீரென ஒரு நாள் அப்பெண்ணின் வீட்டிற்குள் இருக்கும் ஒரு அறையில் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அவருடைய தாய் சென்று பார்த்தப் போது அந்த அறைக்குள் குரேரோ இருந்தது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். 


 


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குரேரோவை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் தினமும் இரவு அப்பெண்ணை நிர்வாணமாக படம் எடுப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த நபரின் மொபைல் போனை பெற்று சோதனை செய்துள்ளனர். அப்போது அப்பெண் தூங்கும் போது நிர்வாணமாக அவரை குரேரோ எடுத்த படங்கள் மொபைலில் இருந்துள்ளது. மேலும் இப்பெண்ணை பின் தொடர்ந்து வந்து வீட்டை குரேரோ அறிந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அவருடைய வீட்டை திறப்பதற்காக பல வகையில் போலி சாவியை தயார் செய்து வைத்துள்ளதாகவும் குரேரோ கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் செயலி பயன்பாட்டின் மூலம் பெண் ஒருவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. 




மேலும் படிக்க:லிவ் இன் பார்ட்னருக்கு நித்தம் ஒரு சித்திரவதை! கொடுமை செய்த கேரள இளைஞர் கைது!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண