இந்தியாவில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா. இவர் நடத்திவந்த பல ஆசிரமங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்திருந்தாகவும் இவர் மீது இன்னும் பல குற்றங்கள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அவர் மீது புதிதாக ஒரு புகார் எழுப்பப்பட்டிருக்கிறது. 


இந்தியாவிலிருந்து வெளியேறிய அவர் தற்போது கைலாசா என்ற தனி தீவை உருவாக்கியிருக்கிறார். தனி தீவை உருவாக்கியது மட்டுமில்லாமல் தனி நாணயம், சட்டத் திட்டம் ஆகியவைகளை உருவாக்கி கைலாசாவுக்கு வர விசா வேண்டும், கைலாசாவிற்கு தனி விமான வசதி வேண்டுமென அறிவித்து அதிரவைத்தார். இந்தத் தீவானது ஈக்வடார் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியானாலும் அதை அந்நாட்டு அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தாலும் ஆன்லைன் மூலம் அவரது பக்தர்களுக்கு காட்சி தந்து சொற்பொழிவும் நிகழ்த்துகிறார்.


இந்நிலையில், வெளிநாட்டு சிஷ்யை ஒருவர் நித்தியானந்தா தனக்கு பாலியல் தொந்ததரவு தருவதாக இ-மெயில் மூலம் கர்நாடகாவில் உள்ள பிடதி காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார். சாரா லாண்ட்ரி என்ற அந்த பெண் அளித்திருக்கும் புகாரில், ”கைலாசா என்ற நாட்டில் நித்தியானந்தாவும் அவரது ஆட்களும் பெண்களை சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்து வருகின்றனர். எனக்கும் பாலியல் தொல்லை தந்தனர்” என தெரிவித்துள்ளார். 






அதை பார்த்த பிடதி காவல்துறையினர், இது போன்ற இமெயில் புகார்களை ஏற்க முடியாது என தெரிவித்திருக்கின்றனர். மேலும், இந்தியாவில் உள்ள ஏதாவது காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளியுங்கள் என அந்த பெண்ணுக்கு பதில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


நித்தியானந்தா பற்றி அப்போதும் இப்போதும் புகார்கள் அளிக்கப்பட்டும், வழக்கு தொடரப்பட்டும் வருகிறது. ஆனால், இதை பற்றி எல்லாம் துளியும் கவலை இல்லாமல் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களை பதிவேற்றி தலைமறைவாக இருந்து வருகிறார் நித்தியானந்தா. 




மேலும் படிக்க: 18 நாளில் முடிந்த 100வது நாள் படம்.. சிகரெட் கேப்ல எல்லாம் யோசிப்பார்.. மணிவண்ணன் சீக்ரெட்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண