வேலூரில் கடந்த 17-ம் தேதி இரவு காட்பாடியில் உள்ள தனியார் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வந்த பெண் மற்றும் அவருடன் வந்த ஆண் நண்பரை பயணிகள் ஆட்டோ என கூறி கடத்தி சென்று பணம், நகை, செல்போனை ஆகிவற்றை பறித்துக்கொண்டு, அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக வரப்பெற்ற புகாரையடுத்து வேலூர் எஸ்.பி உத்தரவின் பேரில் வேலூர் வடக்கு காவல் துறையினர் கடத்தல், வழிபறி, கூட்டு பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வேலூர் சத்துவாச்சாரி வா.உ.சி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன், கூலி தொழில் செய்யும் மணிகண்டன், பாலா (எ) பரத், சந்தோஷ் மற்றும் ஒரு 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து செல்போன், பணம், நகை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணைக்கு பிறகு இவர்களில் மணிகண்டன், பாலா (எ) பரத், பார்த்திபன் மற்றும் ஒரு சிறுவனை என 4 பேரை வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர் படுத்தி 3 பேரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஒரு சீறாறை சென்னையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர். மேலும் இன்று கைதான ஒருவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்துக்கு பிறகு வேலூர் மாநகரில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளில் காவல் துறையினர் தொடர் கண்காணிக்கவும், ரோந்து பணியை அதிகரிக்கவும் வேலூர் மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்