தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையை சேர்ந்த 28 வயது பெண்ணுடன் கயத்தாறில் குடும்பத்தார் முன்னிலையில் வெகுவிமர்சையாக திருமணம் நடைபெற்றது.  இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அதன்பின் அப்பெண் கற்பமுற்ற நிலையில் தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றார். பின் குழந்தை பிறந்ததும் ஆறு மாதம் கழித்து மீண்டும் தூத்துக்குடியில் உள்ள கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.


வீட்டிற்கு வந்தது முதல், மனைவியின் செயலில் பல்வேறு மாற்றங்கள் இருந்துள்ளது. குறிப்பாக எப்பொழுதும் செல்போனும் கையுமாக இருப்பது, அடிக்கடி போன் பேசுவது, இன்ஸ்டாவில் மெசேஜ் செய்வது என இருந்துள்ளார். இதனை கண்டு அதிருப்தி அடைந்த கணவன் இதுகுறித்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மனைவின் செயல்பாடுகளில் மாற்றத்தை கண்ட கணவன் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அதில் அவர் இன்ஸ்டாகிராமில் Mass sundhar 17 என்ற ஐடிக்கு அவ்வப்போது பேசி வந்துள்ளார். உடனே அது குறித்து கணவன் இது யார்? இந்த ஐடியில் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றவே மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் கடந்த 2023 மார்ச் மாதம் விவாகரத்து கேட்டு நெல்லை நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.




இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் தனக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்குள் குழந்தையுடன் விவகாரத்தை பெரும் நிலை ஏற்பட காரணமாக இருந்த அந்த நபரை கண்டறிய திட்டமிட்ட பெண்ணின் கணவர் இன்ஸ்டாகிராம் மூலம் nandhini.K112 என்ற பெயரில் போலியாக ஒரு ஐடி உருவாக்கி mass sundar 17 என்ற ஐடிக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார். நட்பு அழைப்பை ஏற்று அவர் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். முதலில் நல்லவர்  போல் பேசிய  mass sundar பின் தனது பேச்சை துவங்கியுள்ளார். அதில் இதே போல் மற்ற பெண்களிடம் சர்வ சாதாரணமாக பேசுவதாக தெரிவித்துள்ளார். பின் தங்களுடைய ஆபாச படங்களை அனுப்ப வேண்டும் என போலி ஐடியான நந்தினிக்கு கட்டாயப்படுத்தி இருக்கிறார், பலர் இது போல் தன்னிடம் பழகி வருவதாகவும், அதற்கு உதாரணத்திற்காக அவரிடம் பேசிய பெண்கள் அனுப்பிய புகைப்படங்கள் ஆபாச படங்களை போலி ஐடியான நந்தினி ஐடிக்கு அனுப்பி உள்ளார். அவர் அனுப்பிய புகைப்படத்தில் தன்னுடைய மனைவியின் புகைப்படமும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக நெல்லை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், நெல்லை மாநகர்  சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அந்த நபர் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் இன்ஸ்டாகிராம் ஐடி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் சுந்தர் என்ற இளைஞரை கைது செய்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். காவல்துறை நடத்திய விசாரணையில், அவர் ஐடி ஊழியர் போல மிகவும் டீசெண்டாக உடை அணிந்து கொண்டு வெளிநாடு வாழ்க்கை, சொகுசு கார் என பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு திருமணமான மற்றும் திருமணமாகாத இளம் பெண்களை அவருடைய நட்பு வலையில் விழ வைத்து பிறகு அவர் ஆசைக்கு அனைவரையும் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது.


அதனை தொடர்ந்து அவரை கைது செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தங்களது குடும்பம் மற்றும் எதிர்காலத்தை நினைத்து பார்க்காமல் ஒரு சிலர் இது போன்ற மாய வலையில் சிக்கி தங்களது வாழ்க்கையையும், சந்தோசத்தையும் இழந்து விடுகின்றனர். சமூக வலைதலங்களில் எவ்வளவோ நல்ல விசயங்கள் இருந்தும் அதனை தவறாக பயன்படுத்துவதால் தங்களது வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு உதாரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..