நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்த வேலா. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவரை பிரிந்து வாழும் வேலா கொத்தனார் தொழில் செய்து வருகிறார். இவரது இரண்டு மகன்களும் பெயிண்டர் தொழில் செய்து வருகின்றனர். வேலாவின் மூத்த மகன் நாகர்கோவில் பகுதியில் பணி செய்து வருகிறார். அவரது இளைய மகன் பார்வதி நாதன்(22) நெல்லையில் உள்ள கட்டிட பணிகளுக்கு பெயிண்டிங் தொழிலுக்கு சென்று வருகிறார்.  இந்த நிலையில் நேற்று இரவு  அவர் பெங்களூர் பகுதிக்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று உள்ளார். அப்போது கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த நண்பர் ஒருவர் மது அருந்துவதற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. அப்போது மது பாட்டில் வாங்குவதற்காக கிருஷ்ணாபுரம் ஆதிபராசக்தி நகர் பகுதியில் உள்ள மதுபான கடைகள் சென்று மது பாட்டில்களை வாங்கி விட்டு தனியாக வந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் பார்வதிநாதனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.


இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து பார்வதி நாதன் உயிரிழந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் சிவந்திபட்டி போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ரிக்கி வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கொலை நடந்த இடத்தில் நெல்லை ஊரக உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டு தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.  இந்த நிலையில் ஏற்கனவே பார்வதி நாதன் மற்றும் அவரது நண்பர்களுக்கு இடையே இருசக்கர வாகனம் & செல்போனை எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.


இந்த விவகாரத்தில் பார்வதி நாதனின் நண்பர்களை சிவந்திபட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். இதனையொட்டி ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..


Chandrayaan 3 Landing LIVE: இஸ்ரோவின் கனவுத்திட்டம்; நிலவில் தரையிறங்கும் சந்திரயான் - 3 விண்கலம்-ஏற்பாடுகள் தீவிரம்