Chandrayaan 3 Landing LIVE: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்...இஸ்ரோவின் அடுத்த அதிரடி!

Chandrayaan 3 Landing LIVE Updates: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பின் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் இங்கே காணலாம்.

உமா பார்கவி Last Updated: 24 Aug 2023 08:00 PM
Chandrayaan 3 Landing LIVE: நிலவின் பள்ளம், மேடுகளை துல்லியமாக படம்பிடித்த லேண்டர்

விக்ரம் லேண்டர் தரையிறங்கிய போது எடுத்த நிலவின் புதிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பின் காட்சிகள் இஸ்ரோ வெளியிட்ட வீடியோவில் இடம் பெற்றுள்ளன. நிலவின் பள்ளம், மேடுகள் உள்ளிட்டவை புதிய வீடியோவில் துல்லியமாக இடம் பெற்றுள்ளன. விக்ரம் லேண்டரில் உள்ள மேரா எடுத்து அனுப்பிய படங்களை பகிர்ந்துள்ளது இஸ்ரோ.





Chandrayaan 3 Landing LIVE: ஆய்வை தொடங்கிய ரோவர்

நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வெற்றிகரமாக ரோவர் பிரிந்த நிலையில் சந்திரயான் 3 திட்டத்தின் அறிவியல் ஆய்வுப் பணிகள் தொடங்கின.

Chandrayaan 3 Landing LIVE: பிரக்யான் ரோவரில் இரண்டு கருவிகள் - இஸ்ரோ தலைவர்

பிரக்யான் ரோவரில் இரண்டு கருவிகள் உள்ளன. இந்த இரண்டு கருவிகளும் வெப்பநிலை, மண்ணின் தன்மை,  நில அதிர்வுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.





Chandrayaan 3 Landing LIVE: ”கனவு நனவாகியது" - முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரான் 3 வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவது எனது நீண்ட நாள் கனவு. தற்போது அது நனவாகியது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.





Chandrayaan 3 Landing LIVE: தென் துருவத்தை தேர்தெடுத்தது ஏன்? - இஸ்ரோ தலைவர் விளக்கம்

சந்திரயான்-3 தரையிறங்கும் தளமாக தென் துருவத்தை இஸ்ரோ தேர்வு செய்ததற்கான காரணங்களை இஸ்ரோ தலைவர்  சோமநாத் விளக்கியுள்ளார். தென் துருவம் அதிக அறிவியல் உள்ளடக்கம் இருக்க வாய்ப்புள்ளது. தென் துருவத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும் என்றார் இஸ்ரோ தலைவர்.


 





Chandrayaan 3 Landing LIVE: ககன்யான் திட்டம் நிறைவேற்றப்படும் - இஸ்ரோ தலைவர்

சந்திரான் 3 விண்கல வெற்றியை அடுத்து, ககன்யான் திட்டம் நிறைவேற்றப்படும். செப்டம்பர் அல்ல அக்டோபர் முதல் வாரத்தில்  இந்த திட்டம் செயல் வடிவம் பெறுவதற்கான இலக்கை கொண்டிருக்கிறோம் என்றார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். மேலும், 2025ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படும் என்றார் இஸ்ரோ தலைவர்.





Chandrayaan 3 Landing LIVE: நிலவை தொடர்ந்து சூரியனை டார்கெட் செய்யும் இஸ்ரோ

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்றும் ஆதித்யா-எல் 1 விண்கலம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 





Chandrayaan 3 Update: ”நிலவில் நடைபயணம் தொடங்கிய சந்திரயான் 3-இன் பிரக்யான் ரோவர்” இஸ்ரோ போட்ட டிவீட்

Chandrayaan 3 Update: ”நிலவில் நடைபயணம் தொடங்கிய சந்திரயான் 3-இன் பிரக்யான் ரோவர்” இஸ்ரோ போட்ட டிவீட்

Chandrayaan 3 Landing LIVE: விக்ரம் லேண்டரில் இருந்து ரோவரைத் தரையிறக்கும் பணி தொடக்கம்

Chandrayaan 3 Landing LIVE: விக்ரம் லேண்டரில் இருந்து ரோவரைத் தரையிறக்கும் பணி தொடக்கம்

நிலவின் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ


Chandrayaan 3 Landing LIVE: நிலவின் மேற்பரப்பு படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ

விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.





Chandrayaan 3 Landing LIVE: பெங்களூரு கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் அனுப்பிய சந்திரயான் 3

சந்திரயான் 3 லேண்டருக்கும் பெங்களூரு தரை கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொலைத் தொடர்பு இணையம் வெற்றி பெற்றுள்ளது.

Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் 3 வெற்றி - அடுத்தது என்ன?

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பிறகு, சுமார் 2 மணி நேரத்துக்குப் பெரும்பாலும் எதுவும் செய்யாது. அதில் உள்ள சாய்வு அளவை மானி மூலம், எந்த கோணத்தில் இருக்கிறது என்பதை பூமிக்கு அனுப்பும். அதேபோல நிலவில் தரை இறங்கியபோது நடந்த நிகழ்வுகளின் தரவுகளையும் நமக்கு அனுப்பி வைக்கும். 

Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் 3 திட்டம் வெற்றி - தலைவர்கள் வாழ்த்து

  • நிலவின் தென்பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை உணர்கிறேன் -  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

  • சந்திரயான் 3 திட்ட வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்துள்ளது - சிபிஎம் தலைவர் கே.பாலகிருஷ்ணன்

  • இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமை, துணிச்சலை நிரூபிப்பதாக அமைந்துள்ளது - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

  • சந்திரயான் 3 வெற்றி இன்னும் மென்மேலும் உயரம் செல்ல நம்மை ஊக்குவிக்கும் - காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்



Chandrayaan 3 Landing LIVE: விஞ்ஞானிகள் வரலாறு படைத்துள்ளனர் - குடியரசுத் தலைவர்

நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கியதன் மூலம் விஞ்ஞானிகள் வரலாறு படைத்துள்ளனர். ஒட்டுமொத்த இந்தியர்களையும் இஸ்ரோ பெருமைப்படுத்தி உள்ளது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.





Chandrayaan 3 Landing LIVE: ஒவ்வொரு இந்தியனின் கூட்டு வெற்றி - கார்கே

சந்திரயான் 3 திட்ட வெற்றி ஒவ்வொரு இந்தியரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Chandrayaan 3 Landing LIVE: ஆதித்யா L1 ஏவுவதற்கு தயாராக உள்ளது - சோம்நாத்

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா L1 விண்கலம் ஏவுவதற்கு தயாராக உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கலம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஏவப்படும் என்று சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் 3 வெற்றி - ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வாழ்த்து

சந்திரயான் 3 வெற்றி பெற்றதற்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) வாழ்த்து தெரிவித்துள்ளது.





Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் 3 வெற்றி - நாசா வாழ்த்து

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு நாசா வாழ்த்து தெரிவித்துள்ளது.





Veeramuthuvel Chandrayaan : சந்திரயான் 3-க்கு மூளையாக செயல்பட்ட தமிழன்.. உலக நாடுகளை மிரளவைத்த வீரமுத்துவேல்!
Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் திட்டம் - தடம் பதித்த தமிழர்கள்

சந்திரயான் 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார். சந்திரயான் 2 திட்ட இயக்குநராக  முத்தையா வனிதா பணியாற்றினார். சந்திரயான் 3 திட்ட இயக்குநராக வீரமுத்துவேல் பணியாற்றியுள்ளார்.

Chandrayaan 3 Landing LIVE: நிலவில் இந்தியா - முன்னாள் இஸ்ரோ தலைவர் வாழ்த்து

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் கூறுகையில், "நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.இந்த தருணத்திற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.





Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் 3 இயக்குநர் வீர முத்துவேலுக்கு பாராட்டு

சந்திரயான் 3 திட்ட இயக்குநர் சோம்நாத், விழுப்புரத்தைச் சேர்ந்த வீர முத்துவேலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Chandrayaan 3 Landing LIVE: நிலவில் இந்தியா - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.





Chandrayaan 3 Landing LIVE: ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி

சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் 3 திட்டம் வெற்றி - பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்

சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற நிலையில், மக்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.





Chandrayaan 3 Landing LIVE: புதிய இந்தியா உருவாகியுள்ளது - பிரதமர் மோடி

சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற நிலையில், புதிய இந்தியா உருவாகி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Chandrayaan 3 Landing LIVE: சரித்திரம் படைத்தது சந்திரயான் 3..நிலவில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. சந்திரயான் 3 விண்கலம் 10 கட்டங்களாக பயணித்து நிலவில் லேண்டர் தரையிறங்கியது.





Chandrayaan 3 Landing LIVE: பிரதமர் மோடி காணொலியில் இணைந்தார்

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொலி மூலம் இஸ்ரோ செயலகத்துடன் இணைந்தார்.

Chandrayaan 3 Landing LIVE: 17.8 கிமீ உயரத்தில் லேண்டர் விக்ரம்

நிலவின் மேற்பரப்பில் இருந்து 17.8 கிமீ உயரத்தில் லேண்டர் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.





Chandrayaan 3 Landing LIVE: லேண்டரின் வேகம் 5,700 கி.மீ ஆக குறைப்பு

தரையிறங்கும் பணி தொடங்கியுள்ள நிலையில் லேண்டரின் வேகம் 5,700 கி.மீ ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Chandrayaan 3 Landing LIVE: எந்த இடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும்?

தரையிறங்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நிலவில் இறங்குகிறது விக்ரம் லேண்டர். நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி, மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே லேண்டர்  தரையிறங்கவுள்ளது.

Chandrayaan 3 Landing LIVE: நிலவில் இறங்குகிறது விக்ரம் லேண்டர்

தரையிறங்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நிலவில் இறங்குகிறது விக்ரம் லேண்டர்.

Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் 3 - தரையிறங்கும் பணி தொடங்கியது

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி தொடங்கியது. தரையிறங்குவதற்கான கட்டளையை பெங்களூருவில் இருந்து பிறப்பித்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

Chandrayaan 3 Landing LIVE: சரித்திரம் படைக்குமா சந்திரயான் 3? தரையிறங்கும் பணி தொடங்கியது

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி தொடங்கியது.

Chandrayaan 3 Landing LIVE: உச்சகட்ட டென்சனில் மத்திய அமைச்சர்

டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமையகத்தில் இருந்து, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பார்த்து வருகிறார். 


 





Chandrayaan 3 Landing LIVE: லேண்டரை கண்காணிக்கும் விஞ்ஞானிகள்

பெங்களூரில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரை கண்காணித்து வருகின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.





Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் 3 - தரையிறங்கும் பணி சற்று நேரத்தில் தொடங்குகிறது

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.  மாலை 5.44 மணிக்கு சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி தொடங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.

Chandrayaan 3 Landing LIVE: இஸ்ரோவுக்கு உதவி செய்து வரும் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்

கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டதிலிருந்து, அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ஆகியவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ISRO) உதவி செய்து வருகின்றன. விண்கலம், எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து இஸ்ரோவுக்கு தகவலை பகிர்ந்து வருகிறது.

Chandrayaan 3 Landing LIVE: இன்னும் ஒரு மணி நேரத்தில்...

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி இன்னும் ஒரு மணி நேரத்தில் தொடங்குகிறது.  மாலை 5.44 மணிக்கு சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி தொடங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.

Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் - 3 வெற்றிக்காக விரதம் இருக்கும் பாகிஸ்தான் பெண்

சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்குவதற்காக பாகிஸ்தான் பெண் விரதம் இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


 


 





Chandrayaan 3 Landing LIVE: சந்திரனின் ரீல்ஸ்க்காக காத்திருக்கிறேன்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா

சந்திரனின் ரீல்ஸ்க்காகவும் புகைப்படங்களுக்காகவும் காத்திருக்கிறேன் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் 3 - மத்திய அமைச்சர் பிரார்த்தனை

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவதற்காக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டெல்லியில் பிரார்த்தனை செய்தார்.

Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் 3 - தயார் நிலையில் கட்டுப்பாட்டு மையம்

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், பெங்களூரில் உள்ள இஸ்ரோ மிஷன் கட்டுப்பாட்டு மையம் தயாராக இருக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.





Chandrayaan 3 Landing LIVE: இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றும் மோடி

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வுக்காக இஸ்ரோவுடன் தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொலி மூலம் பிரதமர் மோடி இணைந்து உரையாற்ற உள்ளார்.

சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர்..

140 கோடி இந்தியர்களும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உற்றுநோக்கி கொண்டிருக்கும் சந்திரயான் 3 திட்டத்தின், இயக்குனராகவும்,  முக்கிய மூளையாகவும் இருந்து செயல்பட்டவர் தமிழ்நாட்டின்  விழுப்புரத்தைச் சேர்ந்த வீர முத்துவேல் எனும் ஆராய்ச்சியாளர் தான்.

Chandrayaan 3 LIVE : நாடு இன்று வரலாறு படைக்கப்போகிறது : மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

Chandrayaan 3 LIVE : நாடு இன்று வரலாறு படைக்கப்போகிறது : விக்ரம் லேண்டர் தரையிறங்க இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “இன்று இந்தியா வரலாற்றை படைக்க இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

ALS என்னும் Automatic Landing Sequence - ஐ துவக்கி வைக்க தயார்நிலை : இஸ்ரோ தகவல்

தரையிறக்கும் பணி இன்று மாலை 5.44 மணிமுதல் தொடங்கும்

தரையிறக்கும் பணி இன்று மாலை 5.44 மணிமுதல் தொடங்கும். மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தென்துருவத்தில் தரையிறக்க திட்டம்

காணாமல் போன சந்திரயான் 3 டிவிட்டர் கணக்கு

சந்திரயான் 3 விண்கலத்தின் பயணம் தொடர்பான பல்வேறு அப்டேட்களை வழங்கி வந்த, அதற்கான அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இறைவழிபாடு..

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கபட வேண்டும் என, இறைவழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் நடைபெற்ற சிறப்பு பூஜை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





பிரதமர் மோடிக்கு சிறப்பு ஏற்பாடு

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்ரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை காணொலி வாயிலாக காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் -3 மினியேச்சர் மாடல்,



Chandrayaan 3 Landing LIVE: இந்தியா வரலாறு படைக்க உள்ளது - மத்திய அமைச்சர் வாழ்த்து

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சந்திரயான்-3 மூலம், இந்தியாவின் வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் வரலாறு படைக்கப்பட்டுள்ளது என்றும், நிலவில் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்படுவதைக் காண ஆவலுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் -3 நிச்சயம் வெற்றி பெறும்



Chandrayaan 3 Landing LIVE: இஸ்ரோ ஃபேஸ்புக் நேரலை..

https://www.facebook.com/ISRO என்ற ஃபேஸ்புக் இணைப்பை பயன்படுத்தி சந்திரயான் -3 நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம்.

Chandrayaan 3 Landing LIVE: அரசு பள்ளிகளிலும் சந்திரயான் - 3 தரை இறங்குவது நேரலையாக ஒளிபரப்பு

உத்தரபிரதேச  அனைத்து அரசு பள்ளிகளிலும் சந்திரயான் - 3 தரை இறங்குவது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Chandrayaan 3 Landing LIVE: விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது வேகம் குறைக்கப்படும்

நிலவுக்கு 800 மீட்டர் உயரத்தில் விக்ரம் லேண்டர் கருவி வரும்போது சைக்கிளில் பிரேக் பிடித்தால் எப்படி வேகம் குறையுமோ அதுபோல் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட் என்ஜினை முன்புறமாக இயக்கி, லேண்டர் கருவியின் வேகம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் -3 நிலவில் தரையிறங்குவது தொடர்பாக விழிப்புணர்வு

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான் -3 நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னையில் உள்ள பள்ளி மாணவர்கள் செய்துகாட்டி அசத்தியுள்ளனர். 





Chandrayaan 3 Landing LIVE: பெருமைமிகு தருணத்தை நோக்கிய பயணத்தில் சந்திரயான் -3

சந்திரயான்-3 நாளை (ஆகஸ்ட் 23, 2023 அன்று)  மாலை  இந்திய நேரப்படி 6:04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில், சந்திரனின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும், அமெரிக்காவுக்குப் பிறகு, நிலவில் மென்மையாக தரையிறங்கும் நான்காவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான்-3 நேரலை எங்கு காணலாம்?

சந்திரயான்-3 ஆகஸ்ட் 23, 2023 அன்று மாலை 6:04 IST க்கு சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. பணியின் கடைசி பதினைந்து நிமிடங்கள் முக்கியமானதாக இருக்கும். . சந்திரயான்-3 தரையிறங்குவதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில், விண்வெளி ஏஜென்சியின் பேஸ்புக் அக்கவுண்ட், அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது டிடி நேஷனல் ஆகியவற்றில் நேரலையில் பார்க்கலாம்.

Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காண,,

உலகமே பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் தருணம். நாளை மாலை 6:04 மணிதான். நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் தரையிறக்கப்படுவதை நேரலையில் காண இஸ்ரோவின் யூடியுப் இணைப்பில் காணலாம்.


 


Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் - 3 பற்றி முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை



Chandrayaan 3 Landing LIVE: லக்னோவில் நமாஸ் - சந்திரயான் வெற்றிக்காக பிரார்த்தனை

உத்திரபிரதேச மாநிலம் லக்னோபில் சந்திரயான் -3 வெற்றி பெற இஸ்லாமியர்கள் நமாஸ் செய்தனர்.





Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் - வெற்றி பெற சிறப்பு பூஜை

மகராஷ்டிரா சிவ சேனா உறுப்பினர் ஆனந்த் துபே சந்திரமெளலீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்தார். 





Chandrayaan 3 Landing LIVE: புதிய வீடியோ வெளியிட்ட இஸ்ரோ

ஆகஸ்ட்.20 -இல் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவை படம்பிடித்த வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ




Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான் - 3 வாழ்த்து தெரிவித்த பாடலாசிரியர் வைரமுத்து

சந்திரயான் -3 விண்கலம் நாளை நிலவில் தரையிரங்க உள்ள நிலையில், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


”நேரம் நெருங்க நெருங்க மூளைக்குள் வட்டமடிக்கிறது சந்திரயான் நிலவில் அது மெல்லிறக்கம் கொள்ளும்வரை நல்லுறக்கம் கொள்ளோம் லூனா நொறுங்கியது ரஷ்யாவின் தோல்வியல்ல; விஞ்ஞானத் தோல்வி சந்திரயான் வெற்றியுறின் அது இந்திய வெற்றியல்ல; மானுட வெற்றி ஹே சந்திரயான்! நிலவில் நீ மடியேறு நாளை நாங்கள் குடியேற”




Chandrayaan 3 Landing LIVE: சந்திரயான்-3' விண்கலம் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்

சந்திரயான்-3' விண்கலம் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும் என்று  இஸ்ரோ உறுதிபட தெரிவித்துள்ளது.

Chandrayaan 3 Landing LIVE: நிலவின் புகைப்படங்கள்

சந்திரயான் லேண்டர் எடுத்து அனுப்பிய புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.


Chandrayaan 3 Landing LIVE: தரையிறங்கும் தேதியில் மாற்றமா? இயக்குனர் நிலேஷ் எம் தேசாய் விளக்கம்

இதுதொடர்பாக பேசியுள்ள அகமதாபாத்தை தளமாகக் கொண்ட விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குனர் நிலேஷ் எம் தேசாய் “
ஆகஸ்ட் 23 லேண்டரை நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறக்கம் செய்வதற்கான முழு பணிகளையும் நாங்கள் செய்துள்ளோம், அன்று தரையிறக்கம் நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” இருப்பினும் ஆகஸ்ட் 23 அன்று தரையிறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, லேண்டர் செயல்பாடு மற்றும் சந்திரனில் உள்ள சூழலின் அடிப்படையில் அதை அந்த நேரத்தில் தரையிறக்குவது பொருத்தமானதா என்பதை நாங்கள் முடிவு செய்வோம். சூழல் சாதகமாக இல்லை எனத் தோன்றினால், ஆகஸ்ட் 27-ம் தேதி சந்திரனில் லேண்டர் தரையிறக்கப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்” என பேசியுள்ளார்.

Chandrayaan 3 Landing LIVE: தரையிறங்கும் தேதயில் மாற்றமா?

திட்டமிட்டபடி நாளை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என எதிர்பார்க்கும் சூழலில், திடீரென தரையிறக்க நிகழ்வு தாமதமாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Chandrayaan 3 Landing LIVE: நாளை தரையிறக்கம் செய்யப்படும் லேண்டர்

நாளை மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கம் செய்யப்படும் எனவும், அந்த நிகழ்வு மொத்தமாக நேரலையில் ஒளிபரப்பப்படும் எனவும் ஏற்கனவே இஸ்ரோ தெரிவித்து இருந்தது. அதோடு, சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தகவல் பரிமாற்றம் எந்தவித சிக்கலும் இன்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chandrayaan 3 Landing LIVE: நிலவின் துல்லிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது

இந்த நிலையில், எல்.எச்.டி.ஏ.சி. அதிநவீன கேமராவால் ஆகஸ்ட் 20-ஆம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் துல்லிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.




Chandrayaan 3 Landing LIVE: இஸ்ரோவின் கனவுத்திட்டம்

‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனிலிருந்து விகரம் லேண்டா் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக விடுவிக்கப்பட்ட பிறகு அவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவையொட்டிய சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்தன.

Chandrayaan 3 Landing LIVE: இஸ்ரோ வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்

இஸ்ரோ லேட்டஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது

Chandrayaan 3 Landing LIVE: ‘விக்ரம்’ லேண்டா் அனுப்பிய சமீபத்திய புகைப்படம்

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டா் நிலவின் அருகில் எடுத்த துல்லியமான புகைப்படத்தை இஸ்ரோ செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

Background

இஸ்ரோ அறிவிப்பு:


சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “சந்திரயான் 3 ரோவர், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது, நிலவிற்காகவே உருவாக்கப்பட்டது சந்திரயான் 3 ரோவர் லேண்டரில் இருந்து இறங்கி, நிலவின் மேற்பரப்பில் தனது பயணத்த தொடங்கியது. கூடுதல் விவரங்கள் விரைவில்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


தரையிறங்கிய சந்திரயான் -3


சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நேற்று மாலை 6.04 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து 6 மணி நேரத்திற்குப் பிறகு லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கியது. இந்த பிரக்யான் ரோவர் சுமார் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. பிரக்யான் ரோவரின் வேகம் அதன் செயல்பாட்டை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக மெதுவாக செல்லும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சுமார் 2 மணி நேரத்தில் பிரக்யான் ரோவர் தனது பணியை தொடங்கும் என்று ஏற்கனவே இஸ்ரோ அறிவித்திருந்தது. இதன்படி, தற்போது பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து தனது பணியை தொடங்கியுள்ளது. இதற்காக விக்ரம் லேண்டரில் சாய்வு தளம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.


கண்காணிப்பு:


இந்த சாய்வு தளம் மூலமாக ரோவர் தரையிறக்கப்பட்டது. 6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையிலான இந்த ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். அப்போது நிலவில் உள்ள நீராதாரம்,  கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளன.


அடுத்து வரும் 14 நாட்களில் நிலவில் கண்டுபிடிக்கப்படும் முக்கிய அம்சங்களை லேண்டர் படம்பிடித்து இஸ்ரோவிற்கு அனுப்பப்பட உள்ளது. உலகிலே நிலவின் தென் துருவத்தில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த மகத்தான சாதனையை படைத்த இந்தியாவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.