நெல்லையில் பல்வேறு இடங்களில் தங்கி வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்  பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் மேலப்பாளையம் அடுத்த வீரமாணிக்கபுரம் பகுதியில் தங்கி உத்திர பிரதேசத்தை சேர்ந்த துர்கேஷ் என்பவர் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில்  நேற்று இரவு இவர் வழக்கமாக பணிகளை முடித்துவிட்டு தான் தங்கி இருக்கும் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சில இளைஞர்கள் குளிர்பானம் வேண்டுமென கேட்டுள்ளனர். அவர்களுக்கு குளிர்பானத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது வட மாநிலத்து இளைஞரிடம் இருந்து வழிப்பறி செய்து ரூபாய் 3000 பணம் உள்ளிட்டவைகளை எடுத்துவிட்டு இளைஞர்கள் தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசில்  வட மாநிலத்து நபர் புகார் அளித்துள்ளார்.




தொடர்ந்து நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அவர்களை தேடும் பணியையும் தீவிரப்படுத்தினர். அப்போது அவர்கள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற போலீசார் அவர்ளை சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் வடமாநிலத்து இளைஞரிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். செல்வ கண்ணன், முத்துகுமார், கண்ணன் மற்றும் 2 இளம் சிறார்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையானது நடைபெற்று வருகிறார். மேலும் கைது செய்யப்பட்ட செல்வ கண்ணன், கண்ணன்,முத்துக்குமார் ஆகிய மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சிறார்களையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பணியை முடித்து விட்டு திரும்பும் நபரிடம் குளிர்பானம் கேட்பது போல் நடித்து பணத்தை திருடிச்சென்ற 2 சிறார்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.