மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் மூடப்பட்ட கடையில் இருந்து மனித உடலின் பாகங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்


மும்பையில் உள்ள நாசிக் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இது தொடர்பாக அருகேயுள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூடப்பட்டுக் கிடந்த கடையை ஆய்வு செய்தனர். கடையைத் திறந்ததுமே போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இது குறித்து தெரிவித்த போலீசார், ''அந்தக்கடை முழுவதும் பழைய பொருட்கள்  இருந்தது.




Crime : ரூம், பைக், செல்போன்! காதலுடன் உல்லாசம்... வேலை செய்த வீட்டில் வேலையைக்காட்டிய இளம்பெண்...






அங்கே இருந்த இரண்டு பிளாஸ்டிக் பைகளில்  மனித காதுகள், மூளை, கண்கள் மற்றும் சில மனித உறுப்புகள் இருந்தன. இது கடைக்குள் எப்படி வந்தது? யாராவது கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் முடிவுக்கு பிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டனர்.


அந்தக்கடை ஓனரின் இரண்டு மகன்களும் மருத்துவர்கள். மருத்துவத்துறை ரீதியாக அங்கு உடல் பாகங்கள் வந்ததா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


உடல் பாகங்கள்..


வெளிநாடுகளில் உடலை துண்டு துண்டாக்கும் சம்பவம் அதிகம் அரங்கேறுவது வழக்கம். கொலையை மறைக்கவும், உடலை எளிதாக மறைத்துவிடலாம் என்பதால் கொலையாளிகள் உடலை துண்டு துண்டாக்குவது உண்டு. அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் சமீபத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலம் ஒன்று இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அந்த சடலத்தை கைப்பற்றி அவர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அந்த சடலத்தை அடையாளம் கண்டு கொள்ள முயற்சி செய்தனர். அதில் அந்த சடலம் காணாமல் போன பிரியானா என்பவரின் சடலம் என்று உறுதியானது. இதைத் தொடர்ந்து பிரியானாவை கடைசியாக தொடர்பு கொண்ட நபர்கள் யார் என்ற வகையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவரை கடைசியாக தொடர்பு கொண்ட எரிக் நானி மற்றும் கெட்லின் மோர்கன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். 




ஓட்டலில் தீர்ந்து போன பீப் கறி: ஆத்திரமடைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர்; கண்டக்டர் பலி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண