வேளாங்கண்ணியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து மர்ம நபர்கள் திருடி செல்லும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற பேராலயத்திற்கு பக்தர்களாகவும் யாத்திரிகளாகவும் தினம் தோறும் ரயில் பேருந்து மற்றும் வாகனங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் வந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே சந்திரகாந்த் என்பவர் வசித்து வருகிறார். வேலைக்கு சென்று விட்டு இரவு தனது வீட்டின் வாசலில் வழக்கம்போல இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றவர்.




பணி நிமித்தமாக வெளியே செல்வதற்காக காலையில் வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரகாந்த் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். அப்போது இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வாகனத்தின் சைடு லாக்கை லாபகமாக உடைத்து சத்தம் கேட்காதவாறு சுருதி தூரம் வாகனத்தை தள்ளி சென்று திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.


இதுகுறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சந்திரகாந்த் புகார் அளித்துள்ளார். சிசிடி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போன் சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண