Crime : தெலங்கானாவில் இளம்பெண் ஒருவரை, அவரது உறவினர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போனதாக புகார்
தெலங்கானா மாநிலம் விகாபாரத் பகுதியில் உள்ள கல்லாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஷா (22). இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது தயாராருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக ஹைதரபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது தாயாரை மருத்துவமனையில் இருந்து கவனித்து கொண்டு வந்துள்ளார் ஸ்ரீஷா.
இந்நிலையில், ஸ்ரீஷாவின் தந்தை ஐங்கையா, மகளை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். விட்டுக்கு வந்த ஸ்ரீஷா வேலைகளை செய்யாமல் செல்போனை பயன்படுத்தி கொண்டிருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஐங்கையா, ஸ்ரீஷாவை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் கோபத்தில் ஸ்ரீஷா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வெளியே சென்ற ஸ்ரீஷா நள்ளிரவு ஆகியும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் ஐங்கையா அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஜூன் 10ஆம் தேதி ஸ்ரீஷா மாயமான நிலையில், மறுநாள் நண்பகல் ஒரு குளத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கண்களை ஸ்குரூ டிரைவரால் குத்திய கொடூரம்
அப்போது, ஸ்ரீஷாவின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவரது கண்கள் ஸ்குரூ டிரைவரால் குத்தப்பட்டு, கழுத்து பிளேடால் அறுக்கப்பட்டு கொடூரமாக முறையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி, ஸ்ரீஷாவின் உறவினர் அனில். இவர் ஸ்ரீஷாவை காதலித்து வந்துள்ளார். இதுபற்றி ஸ்ரீஷாவிடம் பல முறை கூறியுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஸ்ரீஷாவிடம் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதற்கு ஸ்ரீஷா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும், உடலுறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்துள்ளார்.
பகீர் வாக்குமூலம்
இதற்கிடையில், ஸ்ரீஷா வீட்டை விட்டு வெளியே வந்ததை அறிந்த அனில், அன்றைக்கு ஸ்ரீஷாவிடம் உடலுறவு கொள்ள வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, குடிபோதையில் இருந்த அனில், தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் ஸ்ரீஷாவை அடித்து, கண்களை ஸ்குரூ டிரைவரால் குத்தியுள்ளார். மேலும், குளத்தில் முழ்கடித்து கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்தார்.
இதனை அடுத்து, போலீசார் குற்றச்சாட்டப்பட்ட அனிலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இளம்பெண் கொலை வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், மாநில டிஜிபியிடம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.