காஞ்சிபுரம் மாவட்டம் செட்டியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஏழுமலை-பரமேஷ்வரி தம்பதியர். இவர்களுக்கு மணிகண்டன், யுவராஜ், வெங்கடேசன் என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களின் மூன்றாம் மகனான வெங்கடேசன் (26) ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். சரிந்திர பதிவேடு குற்றவாளியான இவர் அண்மையில், அடிதடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டு அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.



 

வெள்ளைகேட் பகுதி..

 

இந்நிலையில் நேற்று இரவு சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் வெங்கடேசன் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். இதனையெடுத்து அவ்வழியாக சென்றவர்கள் வெங்கடேசனை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



 

கலர் கோழி குஞ்சு.

 

இதனை அடுத்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வெங்கடேசன் தனது நண்பர்களான சுரேஷ் என்கிற காக்கா சுரேஷ், சக்தி என்கிற கலர் கோழி குஞ்சு ஆகியோருடன் இணைந்து கொண்டு, மது அருந்திவிட்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள கேட் என்ற பகுதியில் இயங்கி வரும் பஞ்சாபி தாபா ஹோட்டலுக்கு, உணவு சாப்பிட சென்றுள்ளனர். 



 

உணவு சீக்கிரமாக வரவில்லை

 

அப்பொழுது, அவர்கள் ஹோட்டல் உரிமையாளர் குட்டி என்கிற லோகநாதன் என்பவர் உடன் உணவு சீக்கிரமாக வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது வெங்கடேசன் குட்டியை பின்புறமாக பிடித்துக் கொண்டு காக்கா சுரேஷ் என்பவனிடம் இவனை கத்தியால், குத்தி விடு எனக் கூற சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தும் போது குட்டி விலகவே வெங்கடேசனின் நடுநெஞ்சியில் கத்தி இறங்கியுள்ளது. இதனை அடுத்து நண்பர்கள் இருவரும் அங்கேயே விட்டுவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக சுரேஷ் என்கிற காக்கா சுரேஷ் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.