ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ராஜாபாதர் தெருவை சார்ந்தவர் மணி. இவரது மகன் கார்த்திக் என்ற கார்த்திகேயன் (வயது 35). இவர் மீது ஒரு கொலை வழக்கு மற்றும் வழிப்பறி ,கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது .
ராணிப்பேட்டை சேர்ந்த கோகுல் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஒரு ஆண்டு சிறைதண்டனைக்கு பின்பு கடந்த 4-ந் தேதி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த கார்த்திகேயன். ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அவருடைய நண்பர்கள் வீட்டில் தலைமறைவாக தங்கி வந்துள்ளார் .
Thiruvalluvar university : தேர்வுக் கட்டணம் செலுத்துமாறு சுற்றறிக்கை : மாணவர்கள் விரக்தி .
ஞாயிற்றுக்கிழமை (நேற்று ) மதியம் காவனூர் ரோடு போலாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது நண்பர் கண்ணன் என்பவர் வீட்டின் மாடியில் அமர்ந்து மதுஅருந்தி கொண்டு இருக்கும் பொழுது , வீச்சு அறிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கண்ணன் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் கார்த்திக்கை அவர்கள் கொண்டு வந்த கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக தாக்க ஆர்மபித்தனர் . தலை , முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார் .
இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் , நகர காவல் நிலைய ஆய்வாளர் கோகுல்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று ரத்தவெள்ளத்தில் மிதந்துகிடந்த கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செய்தியாள்களிடம் பேசிய அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் , சென்ற வருடம் கோகுல் என்பவரை கொலை செய்ததற்காக பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்ததா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் இந்த கொலை வழக்கை விசாரித்து வருகிறோம் .
கார்த்திகேயனை கொலை செய்தமர்ம கும்பல் குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றோம் என்று தெரிவித்தார் . ஜாமீனில் வந்தவர் பட்டப்பகலில் வீடுபுகுந்து சராமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோஃபர் கபில் மீதான மோசடி புகார் : 108 பேரிடம் விசாரணை