இந்தி மொழியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர் இளம் நடிகர் பியர்வி புரி. இவர் இந்தியில் மிகவும் பிரபலமான நாகினி தொடரின் மூன்றாம் பாகத்தில் நடித்தததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் நாகினி மட்டுமின்றி இந்தியில் பல்வேறு தொடர்களில் நடித்து வருகிறார். மேலும், பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் விக்ரமுடன் சாமுராய் படத்தில் நடித்துள்ளார். இந்தியில் பிக்பாஸ் தொடரில் நடித்ததன் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.


இந்த நிலையில், அவருடன் நடிக்கும் சக நடிகை அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பாலியல் புகாரில், கடந்த 2019ம் ஆண்டு அந்த நடிகை தனது 5 வயது மகளுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். அப்போது, நடிகர் பியர்ல் புரி தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, சிறுமியின் தந்தை மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளிதுள்ள புகாரின் அடிப்படையில் பியர்ல்புரியை மும்பை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




பியர்ல்புரி மீது கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிபதிகள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர்.  பிரபல நடிகர் பியர்ல்புரி மீதான இந்த குற்றச்சாட்டு திரைத்துறையினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.


இந்த நிலையில், பியர்ல்புரி எந்தவித குற்றங்களும் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று அவருடன் பணிபுரியும்  அனிதா ஹசானாநந்தானி, கிறிஸ்டல் டி சோசா மற்றும் ஏக்தா கபூர் ஆகியோர் பியர்ல்புரிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் பல்வேறு சதிகள் இருப்பதாகவும் கூறினர்.


 






இந்த நிலையில், நடிகர் பியர்ல் புரிக்கு ஆதரவாக தமிழ் திரைப்பட நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்தும் கருத்து தெரிவித்துள்ளார். யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பியர்ல் புரியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, “பியர்ல் புரி மிகவும் அமைதியாக பேசக்கூடியவர். எனக்கு தெரிந்த அன்பானவர்களில் அவரும் ஒருவர். உண்மை தெரியும் வரை பொறுத்திருப்போம். நான் பியர்ல் புரிக்கு ஆதரவு அளிக்கிறேன். எனது நண்பர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். யாஷிகா ஆனந்தின் இந்த கருத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது.


மேலும் படிக்க : HBD Pandiraj: டெல்டா வாசம்... ஃபிரேம் பை ஃபிரேம் வீசும் ‛நம்ம வீட்டு பிள்ளை’ பாண்டிராஜ்!