இந்தியாவில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் சிறுமி ஒருவருக்கு எதிராக நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் பலரையும் பதற்றம் அடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது. 


மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் 51 வயது மதிக்க நபர் ஒருவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமியின் தாய் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவருடைய குழந்தை இந்த நபர் கடந்த 10 நாட்களாக சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவை வாங்கி கொடுத்து அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நபரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 




இந்தச் சம்பவம் தொடர்பாக மும்பை காவல்துறை டிசிபி சைதன்யா,"ஒரு நபர் சிறுமியை கடந்த சில நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார் என்ற புகார் வந்தது. அந்தப் புகாரை தொடர்ந்து உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் அந்த நபரை நாங்கள் கைது செய்துள்ளோம். விசாரணையில் அந்த நபர் அக்குழந்தையின் வீட்டிற்கு அருகே வசிக்கும் நபர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது"எனக் கூறியுள்ளார். அந்த நபர் மீது ஐபிசி பிரிவு 354 மற்றும் போக்சோ சட்டத்தின் 4,8,12 உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


சமீப காலங்களில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகமாகவே இருந்து வருகிறது. தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தரவுகளின்படி 2019ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிராக 44,783 குற்றங்கள் பதிவாகி இருந்தன. இந்தக் குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 35,331 ஆக குறைந்து இருந்தாலும். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்ந்து அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  மும்பை பகுதியில் சிறுமி ஒருவரை அவர் வீட்டின் அருகே உள்ளவரே 10 நாட்களுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அந்த நபருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: புரோட்டா சூரி இல்ல திருமணத்தில் திருடிய திருடனின் பயோடேட்டா - 'விளம்பரத்திற்காக திருடும் வி.ஐ.பி திருடன்'