Crime : மும்பையில் மாதவிடாய் ரத்தக்கறையை பார்த்த அண்ணன் சந்தேகத்தில் தங்கையை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரத்தக்கறை


மகாராஷ்ரா உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர் சுமித் (30). இவருக்கு 12 வயதில் தங்கை ஒருவர் உள்ளார். சுமித், அவரது மனைவி, அவரது தங்கையுடன் உல்லாஸ் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சுமித்  தனது தங்கையின் ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்ததை பார்த்தார். உடனே எப்படி ரத்தக்கறை வந்து என்று சுமித் தனது தங்கையை கேட்டுள்ளார்.  ஆனால் அந்த சிறுமிக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை. 


உடனே தன் தங்கை யாருடனோ பாலியல் உறவு வைத்துக் கொண்டதால் தான் ரத்தக்கறை படிந்திருப்பதாக சுமித் சந்தேகம் கொண்டார். இதனால் ஆத்திரத்தில் சுமித் தன் தங்கையின் வாயில் துணியை வைத்து அடைத்து, உடல் முழுவதம் தீயால் சூடு வைத்துள்ளார். இதனால் அலறிய சிறுமியை கொடூராமாக தீ வைத்த கம்பியால் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து மூன்று, ஐந்து நாட்கள் அந்த சிறுமியை வயிற்றிலும், முகத்திலும் குத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமி பலத்த காயமடைந்துள்ளார்.


கொடூர கொலை


இதனை அடுத்து, அந்த சிறுமி அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இதுபற்றி மருத்துவமனை தரப்பில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


பின்பு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்பு, தங்கையை கொலை செய்தது அண்ணன் சுமித்தை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் சுமித்தின் மனைவிக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மும்பையில் மாதவிடாய் ரத்தக்கறைய பார்த்த அண்ணன் சந்தேகத்தில் தங்கையை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு சிறுமிக்கு நீதி  கோரியும், கண்டனங்களையும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.  பாலியல் கல்வி இல்லாததால் மட்டுமே இதுபோன்று நடந்துள்ளது என்றும்  பாலியல் கல்வி பற்றி அடிப்படை விழிப்புணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




மேலும் படிக்க


Doctor Murder: சிகிச்சை அளித்த இளம் பெண் மருத்துவரை கொலை செய்த போதை வாலிபர்! கேரளாவில் கொடூரம்!


Kissing Women Underwater: நீச்சல் அடிக்க சென்ற பெண்ணை நீருக்கடியில் முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர்! நடந்தது என்ன?