57 வயது நபரை பாலியல் வலையில் சிக்க வைத்து ரூ.70,000 மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.பாதிக்கப்பட்டவரை பெண் ஒருவர் பயந்தரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு மற்ற மூன்று பேர் தங்களை போலீஸ் என்று காட்டிக் கொண்டு, அந்த குடியிருப்பை ரெய்டு செய்து ரூ. 70,000 பறித்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் பொறி வைத்து நான்கு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
கடந்த 45 நாட்களாக ஜோதி என்ற பெண் தனக்கு போன் செய்து தன்னை சந்திக்கும்படி கோரியதாக அந்த நபர் கடந்த மார்ச் 25ஆம் தேதி போலீசில் புகார் செய்தார். அவர் மார்ச் 23 ஆம் தேதி ஷீர்டி நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைக்கப்பட்டார். அவர் குடியிருப்பை அடைந்த சிறிது நேரத்திலேயே, அந்தப் பெண் அவருடன் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது. மேலும் மூன்று பேர் போலீஸ் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து உள்ளே நுழைந்தனர். தகாத முறையில் நடந்து கொண்டததற்காக 57 வயதுடைய நபரை கைது செய்வதாகவும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ரூ.2 லட்சம் கட்டணம் வசூலிப்பதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
அந்த கும்பல் அந்த நபரிடம் ரூ.45 ஆயிரத்தை கொள்ளையடித்து, ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.25 ஆயிரத்தை எடுக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களில் முழுப் பணத்தையும் கேட்டுப் பெறுவோம் என்று மிரட்டி விட்டுச் சென்றனர்.
பின்னர், அந்த நபர் காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் கூறியுள்ளார். அவர்கள் குற்றவாளியைப் பிடிக்க ஒரு பொறியை அமைத்தனர். காஷிமிராவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே போலீசார் ஒரு பொறியை அமைத்தனர். அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதமுள்ள பணத்தை சேகரிக்க வந்த இரண்டு பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் மற்ற இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்