இரண்டு மாநிலங்களின் ஆளுநரான தமிழிசையை தரக்குறைவாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கை தொடங்கி வைத்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் தன்னை ஒருமையில் பேசுவதாக வேதனையுடன் தெரிவித்திருந்தார். அப்போது பேசிய அவர், “யாரையாவது திட்டுவதாக இருந்தால்கூட அழகு தமிழில் மரிதையாக திட்டுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். 


இந்நிலையில், தமிழிசையை தரக்குறைவாக பேசுவதா..? என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று அவர் கூறுகையில், “இரண்டு மாநிலங்களின் ஆளுநரான தமிழிசையை தரக்குறைவாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருந்துபவர்களுக்குதான் கண்டனம் தெரிவிக்க முடியும. இந்த மாதிரியான பேச்சை மக்கள் கண்டிக்க வேண்டும். அரசியலில் கருத்தியல் ரீதியாக திமுகவால் மோத முடியவில்லை” என்று கூறினார்.


முன்னதாக, இதுதொடர்பாக ஏபிபி நாடு செய்தியாளர் நாஞ்சி சம்பத்திடம் கேட்டறிந்தார். அப்போது அவர்,  ‘நான் தமிழிசையை ஒருமையில் பேசவில்லை ; அப்படி பேசுபவனும் நான் இல்லை. அவர் பொய் சொல்கிறார்’ என்று கூறினார்.


இந்த நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரக்குறைவாக நாஞ்சில் சம்பத் பேசிய வீடியோ காட்சி கிடைத்துள்ளது. இதன்மூலம், தமிழிசை கூறும் குற்றச்சாட்டு உண்மை எனத் தெரியவந்தது. இதற்கு நாஞ்சில் சம்பத் என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண