மும்பையின் போதை தடுப்பு போலீசார் இருமல் மருந்தை பதுக்கியதற்காக இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். அந்த இளைஞர் கூறிய தகவலில் இருந்து கிட்டத்தட்ட 7900 இருமல் மருந்து பாட்டிகளை போலீசார் கைப்பற்றினர். போதைக்கு அடிமையானவர்கள், மது என்பதை தாண்டி செல்கின்றனர். அதில் ஒன்றாக இருக்கிறது இருமல் மருந்து. சில பிராண்ட் இருமல் மருந்தை அப்படியே குடிப்பது மதுவைக் காட்டிலும் போதை தருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இது உயிருக்கு மிக மிக ஆபத்து. ஆபத்தை உணராமல் போதையை தேடும் பலர் இந்த வகை இருமல் மருந்தை தேடி அலைகின்றனர். அவர்களைக் குறி வைக்கும் டீலர்கள் சிலர் குறிப்பிட்ட வகை இருமல் மருந்தை மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்கின்றனர். அதன் ஒரு பகுதியாகவே மும்பையில் 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: புதுவையில் இருந்து விழுப்புரத்திற்கு கடத்தப்படும் மதுபாட்டில்கள்
அவரிடம் இருந்து சுமார் 200 இருமல் மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.60ஆயிரமாகும். இந்த இருமல் மருந்துக்கு மும்பையின் பல பகுதிகளில் கிராக்கி இருப்பதால் இந்த பதுக்கல் நடந்துள்ளது. பின்னர் அந்த இளைஞர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுமார் 7900 இருமல் மருந்து பாட்டில்களை போதை தடுப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட இருமல் மருந்தின் மொத்த மதிப்பு ரூ. 23.77 லட்சமாகும்.
இது குறித்து தெரிவித்துள்ள சீனியர் காவல் ஆய்வாளர் ஒருவர், '' சிவாஜி நகர், கோவண்டி, மேன்கார்டு பகுதிகளில் போதைக்காக இருமல் மருந்து பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போதை தடுப்பு போலீசார் அப்பகுதியை ஆய்வு செய்தோம். அப்போது மேன்கார்டு பகுதியின் பொது கழிவறை அருகே முகேஷ் ராஜாராம் என்பவரை கைது செய்தோம். அவரிடம் இருந்து ரூ.60 ஆயிர மதிப்புள்ள சுமார் 200 இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கொடுத்த தகவலின்படி சிவாஜி நகரில் உள்ள குடோன் ஒன்றில் ஆய்வு செய்தோம். அங்கு மொத்தமாக பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 7900 மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தோம் என்றார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப்டம்பர் 22 வரை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். குற்றவாளி இருமல் மருந்தை போதைக்காக விற்பனை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். ஆனாலும் அவருக்கு மொத்தமாக இருமல் மருந்து கிடைத்தது எப்படி? நிறுவனமே இந்த வேலையில் ஈடுபட்டதா உள்ளிட்ட தகவல்களை திரட்ட தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
முன்னதாக, கொரோனா ஊரடங்கை அடுத்து தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டன. அப்போது மதுக்குடிப்போர் போதைக்காக வார்னிஷை குடுப்பது, இருமல் மருந்தை குடிப்பது என களம் இறங்கினர். இதில் சிலர் உயிரிழக்கவும் செய்தனர். மதுவே உயிருக்கு ஆபத்து எனக் குறிப்பிடும் நிலையில் மேலும் போதையைத் தேடி உயிரைப் பறிக்கும் வேலைகளில் பலர் ஈடுபடுவதையே இந்த சம்பவம் காட்டுகிறது.
உணவு இல்லை என சொன்ன தாயை, அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த மகன். குடிபோதையில் கொடூரம்