மும்பையில் செக்ஸ் சாட் கால் சென்டரை இயக்கியதாகக் கூறி 35 வயதுடைய வாலிபரை கைது செய்து, வளாகத்தில் மும்பை குற்றப்பிரிவு காவல் பிரிவினர் கைது செய்தனர். மேலும் கால் சென்டரில் பணிபுரிந்த 17 பெண்களையும் மீட்டனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை செக்ஸ் சாட் கால் சென்டரை இயக்கியதாகக் கூறி 35 வயதுடைய வாலிபரை மும்பை குற்றப்பிரிவு காவல் பிரிவினர் கைது செய்தனர். மேலும் கால் சென்டரில் பணிபுரிந்த 17 பெண்களையும் காவல்துறையினர் மீட்டனர்.
இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் கைது செய்யப்பட்ட பிரிஜேஷ் ஷர்மா, கால் சென்டரை நடத்தி வந்துள்ளார். அவரிடம் இருந்து கால் சென்டரில் 19 தொலைபேசிகள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தவர்களும் ஆன்லைன் சாட் சேவையை பயன்படுத்தியதாகவும், அவர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தியுள்ளனர்.
சிறையில் அடைப்பு:
மேலும் இந்த மோசடியில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மீட்கப்பட்ட பெண்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை எடுத்த இடத்திலிருந்து அறைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Also Read: Crime: துணிகளை கிழித்து ஊசியால் குத்துவார்.. கணவரின் கொடுமையை மரண வாக்குமூலத்தில் சொன்ன இளம்பெண்!