Crime: பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது.  இந்த நிலையில், பஞ்சாபில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


15 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் கொடுமை:


பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டம் மம்தோட் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. விளையாட்டு வீராங்கனையான இவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிக்கு நடைபயிற்சி மேற்கொள்வதற்காக, தனது வீட்டை விட்டு வெளியேறினார்.  சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றபிறகு,  அங்கு நான்கு பேர் இந்த சிறுமியிடம் பேச்சு வார்த்தை கொடுத்துள்ளனர்.  பின்னர்,  அவர்கள் வைத்திருந்த போதைப்பொருளை சிறுமியை உட்கொள்ளுப்படி வற்புறுத்தியுள்ளனர். போதைப் பொருளை உட்கொண்ட சிறுமி, சிறிது நேரத்தில் மயக்க நிலைக்கு சென்றிருக்கிறார். இதனை அடுத்து, நான்கு பேர் கொண்ட கும்பல்  சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  


பின்னர், அங்கிருந்து நான்கு பேரும் தப்பிச் சென்றனர். இதனை அடுத்து, தனக்கு நேர்ந்ததை  பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நான்கு பேரை தேடி வருகின்றனர்.  லுவ்பிரீத் சிங், பம்மா சிங், ஜஸ்பிரீத் சிங் மற்றும் குர்மீத் சிங்  ஆகியோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது அடையாளம் காணப்பட்டுள்ளது.  நடைபயிற்சி சென்ற 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க


School College Leave: கனமழை எதிரொலி..! சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை