கேரள மாநிலம், கொச்சி அருகே வருமான வரித் துறை அதிகாரிகள் போல் நடித்து நகைத் தொழிலாளியின் வீட்டில் 40 பவுன் நகையும் இரண்டு லட்ச ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏமாந்த நகைத் தொழிலாளி
கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். நகைத் தொழிலாளியான இவர், கொச்சியில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்காக நகைகள் செய்து கொடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இதனால் இவரது வீட்டில் எப்போதுமே நகைகள் இருக்கும், இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் போல் வந்து இறங்கிய நான்கு பேர், இவரது வீட்டில் சோதனை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
60 பவுன் நகை, 2 லட்சம் பணம் கொள்ளை
தொடர்ந்து, சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தாரை சோதனையிடுவதுபோல் பாவனை செய்த நால்வரும், அவர்களது செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஜாமீன் வழங்க முடியாது- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
அதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் இரண்டு லட்சம் பணத்தை எடுத்துக்கொண்ட அந்தக் கும்பல், பரிசோதனைக்குப் பிறகு அவற்றை திரும்பத் தருவதாகவும், வருமான வரித்துறை அலுவலகத்தில் வந்து மேற்படி விவரங்களை தெரிந்து கொள்ளும்படியும் கூறிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றனர்.
காவல் நிலையத்தில் புகார்
ஆனால், சந்தேகமடைந்த சஞ்சய், அவர்கள் சென்றதும் கொச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இது பற்றிக் கூறியுள்ளார். அப்போது அப்படி யாரும் தங்களது அலுவலகத்தில் இருந்து வரவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சஞ்சய் தொடர்ந்து ஆலுவா காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசடிக் கும்பலை தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை.. தாய் உட்பட 4 பேர் கைது.. மருத்துவமனைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்