ஈரோடு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்ததாக சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி உறவினரிடம் பலமுறை தனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கூறியுள்ளார். அது குறித்து விசாரித்தபோது சிறுமியுடன் வளர்ப்புத் தந்தை பாலியல் உறவு வைத்துக்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர். அதில் சிறுமி கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து வளர்ப்பு தந்தையான சையத் அலி என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் மூலம் வரும் கருமுட்டைகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதற்கு சிறுமியின் தாய் இந்திராணி மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட மாலதி உள்ளிட்டோரை கைது செய்தனர். 16 வயது சிறுமிக்கு கருமுட்டை மருத்துவமனையில் இவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்த விசாரணையில், சிறுமியின் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை மாற்றம் செய்து போலி ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை செய்துகொடுத்த ஜோசப் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
சிறுமியின் வளர்ப்புத் தந்தையான சையத் அலி, சிறுமியின் 12 வயதில் இருந்து அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அதில் 5,000 ரூபாய் இடைத்தரகராக செயல்பட்ட மாலதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏழு பேர் கொண்ட சுகாதாரத்துறையினர் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை நடத்தினர். நேற்று ஈரோடு மருத்துவமனையில் வாய்ப்பு செய்த சுகாதாரத்துறை இன்று சேலம் வந்தனர். சுகாதாரத்துறை குழு சேலம் மாவட்டத்தில் சிறுமிக்கு சிகிச்சை செய்யப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படை இன்று மருத்துவமனையில் உள்ள ஆவணங்கள், பதிவேடுகள் போன்றவற்றை சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.
அதன்பின் சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அந்த மருத்துவமனைகளில் உள்ள விவரங்களை சேகரித்து வருகிறோம். தனியார் மருத்துவமனை மீது தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதில் இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் சட்டரீதியாக காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட கருமுட்டைகளை வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஓசூர் சென்று அங்குள்ள மருத்துவமனையில் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.