மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையம் அருகே அமுத்சுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை பொதுமக்களிடையே அறிமுகம் செய்து பணம் வசூல் செய்து வருகின்றது. நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டினால் ஒரு ஆண்டு காலத்திற்கு முதிர்வு தொகை 36,000 ரூபாய் கொடுப்பதற்கு பதில் வட்டியுடன் 37 ஆயிரத்து 300 ரூபாய் கொடுப்பதாக கூறி இத்திட்டத்தில் சேர்ந்த வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு  நேரடியாக சென்று பணம் வசூலித்து வருகின்றனர்.




இவர்களது திட்டங்களை நம்பி சீர்காழி தாலுக்கா பகுதிகளை சேர்ந்த 1000 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வாடிக்கையாளர்களாக சேர்ந்து பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் முதிர்வு தொகை பணம் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட காசோலை கணக்கில் இருப்பு இல்லை என கூறி வங்கிகளில்  திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த நிறுவனத்தை நாடி தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த நிறுவனம் தங்கள் நிறுவனம் பிரச்சனையில் உள்ளதாக கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். 




அதனைத் தொடர்ந்து  கடந்த ஒரு வார காலங்களுக்கு மேலாக அந்த நிறுவனம் பூட்டியே கிடப்பதாகவும், தொலைபேசி வாயிலாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டால் சரியான பதில் அளிக்காததால் அச்சமடைந்தனர். அதனைத் அடுத்து அந்த நிறுவனத்தில் வாடிக்கையாளராக பணம் செலுத்தியவர்கள் பலர்  சீர்காழி காவல் நிலையத்தில்  ஒன்றிணைந்து அமுத்சுரபி நிறுவனத்தால் ஒருகோடி ரூபாய் வரை ஏமாற்றப்பட்டதாக கூறி புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த அமுத்சுரபி நிறுவனம் தமிழக முழுவதும் பல்வேறு கிளைகள் உள்ளது குறிப்பிடுத்தக்கது. 


Gold Silver Price Today: ஒரு ஹேப்பி நியூஸ்.. தங்கம் வாங்க இன்னைக்கு நடையைக் கட்டலாம்.. இதுதான் விலை நிலவரம்..


நாள்தோறும் பத்திரிகை செய்திகளின் வாயிலாக தனியார் நிதி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு பலர் ஏமாறும் சம்பவங்கள் தொடர் கதையாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இருந்த போதிலும் பொதுமக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, நிதி நிறுவனங்களின் ஆசை வார்த்தைக்கு மதி மயங்கி இதுபோன்று தங்கள் கடினப்பட்டு உழைத்து சேமிக்கும் பணத்தை, பல தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து, தங்கள் பணம் முழுவதையும் இழந்து பின்னர் வருத்தப்படுவது வேதனைக்குரிய செயல் என பல முதலீட்டு நிதி ஆலோசகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றன. மேலும் அதிக வட்டிகளுக்கு ஆசைப்படாமல் பொதுமக்கள் அஞ்சலகம், வங்கிகள், எல்ஐசி போன்ற அரசு நிறுவனங்களில் பாதுகாப்பாக தங்கள் முதலீட்டை செலுத்தலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளன