மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆச்சாள்புரம் வள்ளுவர் தெருவில் குடியிருந்து வருபவர் லில்லிபாய். கணவனால் கைவிடப்படட்ட இவர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்கிடம்’ புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், அரசால் குடியுரிமை வழங்கப்பட்ட பட்டா இடத்தில் தொண்டு நிறுவனம் மூலம் கட்டிகொடுக்கப்பட்ட ராஜாமணி என்பவருக்கு சொந்தமான வீட்டில் போக்கியத்திற்கு தான் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து குடியிருந்து வந்ததாகவும், அந்த வீட்டை செல்வம் என்பவருக்கு ராஜாமணி விற்றதால், ராஜாமணி உதவியுடன் செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் வெங்கடாச்சலம், கலியபெருமாள் மற்றும் சிலர் தன்னை வீட்டைவிட்டு வெளியே தள்ளி பூட்டிவிட்டதாகவும், வீட்டில் உள்ள தன்னுடைய நகை, பணம் பொருட்களை எடுக்கவிடாமல் மிரட்டி தன்னை துரத்தி விட்டதாகவும், தான் கொடுத்த போக்கிய பணம் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் தன்னுடைய பொருட்களை திரும்ப பெற்று தனக்கு நியாயம் வழங்கும் வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மேலும்,ராஜாமணி முறைகேடாக ஆச்சாள்புரத்தில் குடியுரிமை பட்டா பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் தனிபிரிவு முதல் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அனைத்து துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்த லில்லிபாய் தன்புகார் தொடர்பாக விசாரணை செய்த ஆனைக்காரன்சத்திரம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரகுராமன் தன்னை படுக்கைக்கு அழைத்து, மிரட்டுவதாக ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்தவர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மயிலாடுதுறை: பெண்ணுதரேனு சொல்லி எல்லாத்தையும் புடிங்கிட்டாங்க - இளைஞர் தற்கொலை முயற்சி
இது குறித்து காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தன்னிடம் நடந்துகொண்டது குறித்து வாய்மொழியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கூறியதாகவும், புகார் தேவையில்லை என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் கூறியுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் ஆணைக்காரன்சந்திரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது பெண் கூறிய பாலியல் குற்றச்சாட்டு காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையில்லை; கொள்ளையில்லை” - ஜெயலலிதா நினைவிடத்தில் ஒபிஎஸ் - இபிஎஸ் உறுதிமொழி
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடெமியின் 15வது வருடாந்திர பட்டமளிப்பு விழா