தமிழகத்தில் சமீப நாள்களாக ஆங்காங்கே, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை வைத்திருக்கும் போதே, அதனை நடுவில் வைத்து புதிதாக சாலைகள் போடப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அடி பம்பை அகற்றி மாற்று இடத்தில் அமைக்காமல் சாலை அமைப்பது, மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி நடாமல் சாலையில் நடுவில் வைத்து புதிய சாலை அமைப்பது தொடர்ந்து சர்ச்சைகளை அதிகாரிகள் ஏற்படுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.  இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றதால், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.




புதிய தார்ச்சாலை:


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் அஞ்சாறு வார்த்தலை கிராமத்தில் இருந்து பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான திருமணஞ்சேரி வழியாக திருமங்கலம் வரை 5 கிலோ மீட்டருக்கு சாலை விரிவாக்கம் செய்து, புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற திருமணம் கைகூடும் தளமான உத்வாக நாதர்  ஆலயத்திற்கு செல்லும் பிரதான சாலையாக இந்த சாலை அமைந்துள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும்  பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறையினர் இந்த சாலையை மூன்று மீட்டர் அகலத்தில் இருந்த சாலையை ஐந்தரை மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்து புதிய சாலை அமைத்து வருகின்றனர். 


Bigg Boss 7 Tamil: தொக்காக சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.. குறும்படம் போட தயாராகும் கமல்.. என்ன நடந்தது?




இந்த நிலையில் அஞ்சாறு வார்த்தலை பகுதி அருகே சாலை நடுவே இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் நெடுஞ்சாலைத் துறையினர் சாலை அமைத்திருப்பது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழியே திருமணஞ்சேரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிக அளவில் வாகனத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வீடியோ உடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.


Anbil Mahesh: ‘அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் - தம்பி நாங்கள்’... ஆசிரியர்கள் பற்றி அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி..!




மேலும், இதுகுறித்து குத்தாலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் கூறுகையில் நெடுஞ்சாலை துறை மற்றும் மின்வாரியத்துறையிடம் தெரிவித்து உடனடியாக மின்கம்பம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், தற்போது இதற்கான மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான தொகையினை நெடுஞ்சாலை துறையினர் செலுத்திய பின்னர் அந்த மின்கம்பம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


World Sight Day: உலக பார்வை தினம் 2023.. கண் கண்ணாடியாக மாறிய மக்கள்.. சென்னை கடற்கரையில் நடந்த சுவாரஸ்யம்..!