தமிழகத்தில் போதை பொருளை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதை பொருள் விற்பனை செய்யும் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தொடர் சோதனையில் ஈடுபட்டு கிலோ கணக்கில் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்து வருகினற்னர். இதே போன்று கடைகளில் ஆய்வு செய்து குட்கா உள்பட போதை பொருட்களை பிடித்து வருகின்றனர்.


SSC GD Recruitment 2024: 10-வது தேர்ச்சி போதும்; 26,146 பணியிடங்கள்; எஸ்.எஸ்.சி. வேலைவாய்ப்ப்பு - முழு விவரம்!




இந்நிலையில்  மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனை நடைபெற்று வருவதாகவும், இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தது. இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் காவல்துறையினர் மற்றும் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.


Udupi Elephant Yam Fry: உடுப்பி சேனைக்கிழங்கு வறுவல்: இப்படியும் செய்யலாம்! அசத்தல் சுவையில்!




இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா தலைமையில் காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் மருத்துவமனை சாலை மற்றும் கேணிக்கரை பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை மீண்டும் மீண்டும் விற்பனை செய்து வந்த இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கூறைநாடு, கேணிக்கரை, மாப்படுகை உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற பொருள்களை விற்பனை செய்த 8 பேரை கைது செய்து கடைகளுக்கு 5,000 வீதம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களை கைது செய்து காவல்துறை ஜாமின் வழங்கியது  குறிப்பிடத்தக்கது.


CM Talent Search Exam: மாதம் ரூ.1000: டிச.1ல் வெளியாகும் திறனாய்வுத்தேர்வு முடிவுகள்! காண்பது எப்படி?




கடந்த சில மாதங்களுக்கு முன் மயிலாடுதுறை நகராட்சி பூங்காவில் பள்ளி மாணவர்கள் பலரும் வகுப்புகளை புறக்கணித்து பூங்காவில் தஞ்சமடைந்து. குட்கா, பான்மசாலா, கூல்லிப், ஹான்ஸ்  உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துக்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து தற்போது மாவட்டம் முழுவதும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் குறித்து தீவிர சோதனைகள் நடைபெற்றது வருகிறது.


TN Rain Alert: வங்கக்கடலில் உருவாகும் புயல்.. 4 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?