தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு – கால் கிலோ
புளிக்கரைசல் – கால் கப்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோள மாவு தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
சேனைக்கிழங்கை சுத்தம் செய்து, நீள வாக்கில் அல்லது சிறிய க்யூப்களாகவோ, உங்களுக்கு தேவையான சைசில் வெட்டி எடுத்துக்கொள்ளலாம். முதலில் அடுப்பில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் வெட்டிய சேனை கிழங்குகள், உப்பு, புளித்தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து குழையாமல் வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு சோள மாவு, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து, சேனைக்கிழங்கை அதில் சேர்த்து நன்றாக புரட்டி எடுத்துக் கொள்ள (மேரியனேட்) வேண்டும். பின்னர் கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து, அது காய்ந்தவுடன் அதில் சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மசாலா அரைக்கத் தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 7, இஞ்சி – ஒரு இன்ச், பூண்டு – 8 பல், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, தேங்காய் துருவல் – ஒரு கப்
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டிலே தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். ஆறிய பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்கமால் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சேனைக்கிழங்கு வறுவலுக்கு தேவையான பொருட்கள்
பட்டை – 1
கிராம்பு – 4
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கறிவேப்பிலை, பட்டை கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் இதில் தயார் செய்து வைத்துள்ள கிழங்கை சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சேனைக்கிழங்கு வறுவல் தயார்.