SBI Interest Rate: திருத்தப்பட்ட கடன்களுக்கான் புதிய வட்டி விகிதமானது, இன்று முதல் அமலுக்கு வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.


கடன்களுக்கான வட்டியை உயர்த்திய எஸ்பிஐ:


நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனமான, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), இன்று தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அ அதன்படி, பல்வேறு கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இப்போது கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டி உள்ளது.


வட்டி எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?


பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, வங்கி அதன் MCLR (மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் ரேட்ஸ்) இல் மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, எம்சிஎல்ஆர் 5 முதல் 10 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது எம்சிஎல்ஆர் 0.05 சதவிகிதத்தில் இருந்து 0.10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த மாற்றங்கள் ஜூலை 15 அதாவது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.


மாதாந்திர தவணை சுமை அதிகரிக்கும்:


வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில், மற்ற எல்லா வங்கிகளையும் விட, எஸ்பிஐ இன்னும் முன்னோக்கி உள்ளது. எஸ்பிஐயின் எம்சிஎல்ஆர் அதிகரிப்பால், அதன் பல்வேறு கடன் திட்டங்களுக்கு, திருப்பி செலுத்த வேண்டிய தொகை உயர்ந்ததாக இருக்கலாம். இதன் காரணமாக, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வட்டிச் சுமை அதிகரித்து, கூடுதல் மாதாந்திர தவணை தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.


உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் என்ன?



  • ஒரு மாத கடன் காலத்திற்கான எம்சிஎல்ஆர் 5 பிபிஎஸ் அதிகரித்து 8.35 சதவிகிதமாக உள்ளது

  • மூன்று மாத கடன் கால அவகாசத்திற்கான MCLR 10 பிபிஎஸ் அதிகரித்து 8.4 சதவிகிதமாக உள்ளது

  • ஆறு மாத கடன் கால அவகாசத்திற்கு MCLR 10 bps அதிகரித்து 8.75 சதவிகிதமாக உள்ளது

  • ஒரு வருட கடன் காலத்திற்கான எம்சிஎல்ஆர் 10 பிபிஎஸ் அதிகரித்து 8.85 சதவிகிதமாக உள்ளது

  • இரண்டு வருட கடன் கால அவகாசத்திற்கு MCLR 10 பிபிஎஸ் அதிகரித்து 8.95 சதவிகிதமாக உள்ளது.

  • மூன்று வருட கடன் காலத்தின் மீது MCLR 5 bps அதிகரித்து 9 சதவிகிதமாக உள்ளது


வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்:


MCLR அதாவது கடன் விகிதங்களின் மார்ஜினல் காஸ்ட் என்பது வங்கிகள் வட்டியை வழங்காத விகிதங்கள் ஆகும். அதாவது, வங்கிகள் வழங்கும் கடன் திட்டங்களின் வட்டி விகிதங்கள், அந்தந்த காலத்தின் MCLR விகிதங்களை விட அதிகமாக உள்ளது. இருப்பினும் எம்சிஎல்ஆர் அதிகரிப்பால் எஸ்பிஐ வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்பது நிம்மதியான தகவலாகும். எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள், வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, தற்போதைய சுழலில் எஸ்பிஐ ஈபிஎல்ஆரில் எந்த மாற்றத்தையும் செய்யாத காரணத்தால், வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.