மயிலாடுதுறை அருகே தனது மனைவியுடன் பழகியதை கண்டித்த மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல் நடத்தி அதிமுக பிரமுகரை காவல்துறையினர் கைது சிறையில் அடைந்துள்ளனர்.


மனைவியுடன் பழகிய நபரை கண்டித்த கணவர்


மயிலாடுதுறை மாவட்டம் காளி பொய்கைக்குடி வெள்ளாளத் தெருவை சேர்ந்தவர் மின்வாரிய அலுவலர் சிவக்குமார். இவரது மனைவி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிவகுமாரின் மனைவியிடம், அதே மருத்துவமனையில் மேற்பார்வையாளராக பணியாற்றிவரும், ஒன்றிய அம்மா பேரவை துணை செயலாளர் ஆன திருமங்கலம் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் 32 வயதான மகன் கீர்த்திவாசன் பழகி வந்துள்ளார். இதனை அறிந்த சிவக்குமார் கீர்த்திவாசனை கண்டித்துள்ளார். 


Papua New Guinea: அதிகாலை 3 மணிக்கு மண்ணில் புதைந்த முழு கிராமம்.. இதுவரை 100 பேர் உயிரிழப்பு?




கொலைமிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் 


இதனால் ஆத்திரமடைந்த கீர்த்திவாசன் கடந்த மே 17-ஆம் தேதி கட்டளைச்சேரி வயல்வெளி பகுதியில் டூவீலரில் வந்த சிவகுமாரை வழிமறித்து தாக்கி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 1000 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு, சிவக்குமாரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த சிவகுமார் குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 


மற்றொரு சிக்கல்... மனைவி கொடுத்த அதிரடி புகார்! முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடி கைது


சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக பிரமுகர்


சிவகுமாரின் புகாரின் பேரில் குத்தாலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கீர்த்திவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மயிலாடுதுறை சிறையில் அடைத்தனர். ஒன்றிய அம்மா பேரவை துணை செயலாளர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


BAN vs USA: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எச்சரிக்கை! வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அமெரிக்கா..!