மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மணக்குடி கிராமம், மேலத்தெருவை சேர்ந்தவர் குமார் என்பவரின் மகன் 30 வயதான முத்துக்குமாரசாமி.  கூலி தொழிலாளியான இவர், தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். இதுபோல நேற்று இரவு முத்துக்குமாரசாமி குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அதனை அவரது தந்தை வழி பாட்டியான கலியபெருமாள் மனைவி 70 வயதான ஆட்சியம்மாள் என்பவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் அருகில் கிடந்த கட்டையை எடுத்து பாட்டியின் தலையில் பலமாக அடித்துள்ளார். 




இதில் ஆச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த செம்பனார் கோயில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்சியம்மாளின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக  மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, முத்துக்குமாரசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




மயிலாடுதுறையில் அமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து ஆளுங்கட்சியினர் யாரும் சந்திக்காத நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்!


மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரம் 11- ம் தேதி ஒரே நாளில் கொட்டித்தீர்த்த அதீத மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளகாடாக காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான தலைச்சங்காடு கிராமத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனியார் நாளிதழ் செய்தியாளர் இளஞ்செழியன் என்பவர் செய்தி சேகரிப்பதற்காக அமைச்சரின் பின்னால் வந்த அரசு வாகனத்தை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய  வாகனம் திடீரென நிறுத்தப்பட்டதால் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானார். 




இதனை தொடர்ந்து அவரை வருவாய்துறையினர் அரசு வாகனத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர். செய்தியாளருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆளுங்கட்சியினர், அரசு அலுவலர்கள், என யாரும் மீண்டும் வந்து சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




இந்தநிலையில், பூம்புகார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,  அதிமுக மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் விபத்துக்குள்ள செய்தியாளரை நேரில் சந்தித்து செய்தியாளருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் நிதி உதவி வழங்கி அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட செய்தியாளரை தற்போது வரை திமுக சார்பில் யாரும் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


NC22 First Look: வெங்கட் பிரபு சிறையில் நாகசைதன்யா.. வெளியானது NC22 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்!