பொது விநியோகத் திட்டத்திற்கு(ரேஷன் கடைகள்) சப்ளை செய்யும் இரண்டு குழுமங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
40-க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை:
இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான, சென்னையில் உள்ளிட்ட 40 க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இரண்டு நிறுவனங்களும், பொது விநியோகத் திட்டத்தின்படி பாமாயில் மற்றும் பருப்பு சப்ளை செய்வதாக கூறப்படுகிறது.
பொங்கல் தொகுப்பு மோசடி, அருணாச்சலா இன்பக்ஸ், இன்டகரேடட் சர்வீஸ் லிமிடெட் பொங்கல் தொகுப்பில் தரம் இல்லாத பொருட்களை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு லட்சம் டன் பருப்பு வகைகள் விநியோகத்தில் முறைகேடு நடந்ததாக இந்த நிறுவனங்களின் மீது குற்றச்சாட்டு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
காலை முதல் சோதனை:
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், பொது விநியோக திட்டத்துக்கு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் சிறப்பு தொகுப்பில் முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழுப்பு துறைக்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை, ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்தான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
Also Read: TN Rain Alert: இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன..?