மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சிக்கு உட்பட்ட புத்தமங்கலம் அக்ரகார தெருவில் குணசேகரன் என்பவரின் 40 வயதான மகன் ராஜசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தில் நாக தேவதை சாமி சிலையை பிரதிஷ்டை செய்து அதற்கு வழிபட்டு செய்து வருகிறார். 




இந்நிலையில் இவரது பக்கத்து இடத்தில் வசித்து வரும் இவரின் உறவினரான பாலகிருஷ்ணன் என்பவரது மகன் சுரேஷ், சுகந்தி, சுபா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ராஜசிவம் இடத்தில் உள்ள வேலியை பிரித்து அத்துமீறி பிரதிஷ்டை ராஜசிவம் வழிபாடு செய்து வந்த நாக தேவதை சிலையை கடப்பாறையால் அடித்து உடைத்து விட்டு அங்குள்ள பொருள்களை திருடி சென்றுள்ளதாக ராஜசிவம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சாமி சிலை வைத்து இந்து மதத்தை வளர்க்கக்கூடாது, வழிபடவும் கூடாது எனவும் கூறிவிட்டு கொலைமிரட்டல் விடுவதாகவும் ராஜசிவம் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Nayanthara Vignesh Shivan: நோ மேக்-அப் லுக்...மும்பையில் ஜவான் படப்பிடிப்பு... கணவர் விக்னேஷ் சிவனுடன் பயணித்த நயன்தாரா!




ராஜசிவத்தின் புகாரை பெற்றுக்கொண்ட மணல்மேடு காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுவாமி சிலையை உடைத்த சம்பவம் அப்பகுதியில் ஆன்மிகவாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Gold, Silver Price : ஹேப்பி நியூஸ் மக்களே... குறைந்தது தங்கம் விலை...இன்றைய நிலவரம் இதுதான்...!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண